தமிழ் மக்களின் வீரம்
நிறைந்த வரலாற்றில் 1970 தொடக்கம்
2009 வரையான காலப்பகுதி
முற்றிலும் மாறுபட்டது. இன ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு இளம் சமுகத்தின்
பிரதிபலிப்பு உலகநாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு போராட்ட அமைப் பைத் தோற்றுவித்திருந்தது. அதன் முடிவும் அந்த
வியப்பைத் தொட்டு இன்று தமிழ்மக்கள் கைகளிலிருந்து நழுவிப்போனது.
ஞாயிறு, ஜூன் 17, 2012
ஞாயிறு, ஜூன் 10, 2012
இடம் பிடித்தலும் அடம்பிடித்தலும்
விளையாட்டுமைதானம் யாருக்கு சொந்தம்?
வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் பிரிவில் உதைபந்தாட்டச் சம்பியனாக கனகராயன்
குளம் மகாவித்தியாலய அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த அணி
மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும். தவிர இந்தப் பாடசாலையில் கூடைப்பந்து, கரப்பந்து அணிகளும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டத்துக்குச் செல்லவுள்ளன.
திங்கள், ஜூன் 04, 2012
ஆர்ப்பாட்டம்-அறிக்கை எது சரி?எது பிழை?
மே 18 மறந்தவர்களும் மறக்காதவர்களும்
காலை 8.30 மணி, அவ சரமாக தொலை பேசிக்கு 3 தவறிய அழைப்புக்கள் வந்திருந்தன. புதிய நம்பராக
இருந்ததால் திருப்பி ஒருமுறை மிஸ்கோல் அடித்துவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டேன். அந்த நம்பரில் இருந்து மீண்டும் கோல்
""கம்ப்பஸ் பொடியன் ஒரு வனுக்கு யாரோ அடித்துப் போட் டாங்களாம். மண்டை உடைந்து கொஸ்பிற்றல்ல
அற்மிற் பண்ணி இருக்கு'' இது தான்
அந்தப் புதிய நம்பரில் இருந்து எனக்கு கிடைத்த செய்தி.
வடக்கு, கிழக்கு படைகளின் பூமியாம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஓரிடத்தில் வடக்குக, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைத்தல் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக
நாட்டில் நிலவிய போர் பொது மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இது இப்போது
இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் முழுமையான சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர்
பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் கனவை நனவாக்க
ஒரு போதும்
இடமளிக்க மாட்டேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள்
அகற்றப்படமாட்டா.
ஞாயிறு, பிப்ரவரி 19, 2012
வீடு வரும்வரை காய்ந்திருக்கும் மக்கள்

அன்று பலபேருக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும். ஏதோமுண்டியடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பின்னால் கூடிநின்று ஏதேதோபேசிக்கொண்டும் இருந்தார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் அது, இயற்கைத் தோற்றமுடைய அந்தக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. கிளிநொச்சி நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக கிட்டத்தட்ட 20 25 கிலோமீற்றர் பயணித்தால் சென்றடையக் கூடிய கிராமத்தில் 420இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
ஞாயிறு, பிப்ரவரி 12, 2012
நியாயம் கிடைக்குமா ? ஏங்கும் விவசாயிகள்
""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''
""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''
"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''
முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.
செவ்வாய், பிப்ரவரி 07, 2012
ந(வ)ல்லிணக்கம் ஆகிவிடுமோ

சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஓட்டுமா கூறப்பா, சுண்ணாம்பும் தயிரும் சேர்ந்தா திங்கிறவன் யாரப்பா' இது உணர்ச்சி கவிஞர் காசியானந்தனின் வரிகள். இரு இனங்களுக்கிடையே எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை இந்தப் பாடல் வரிகள் எடுத் தியம்புகின்றன. இலங்கையில் இன நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்கள் இப்போது தாராளமாகப் பாவிக்கப்படுகின்றன. அறிக்கைகளிலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் திருவாய் களிலும் இவற்றுக்குப் பஞ்சமில்லை.
புரட்டிப் போடும் ஞாபகங்கள்
சுட்டிகள்:
இடப்பெயர்வு,
குண்டுவீச்சு,
ஞாபகங்கள்,
திப்பிலி,
பதிவு,
பூமுகன்,
வீகேஎம்
கிளிநொச்சி ""கொலை வெறி''

Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.
திங்கள், ஜனவரி 23, 2012
இதுவும் அபிவிருத்திதான்
தென் இலங்கையில் அபிவிருத்திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்
இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமா 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
ஞாயிறு, ஜனவரி 15, 2012
சனி, ஜனவரி 14, 2012
நோய் மீதே வாழ்வு
இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)