திங்கள், ஜூன் 04, 2012

ஆர்ப்பாட்டம்-அறிக்கை எது சரி?எது பிழை?


மாணவர் சக்தி Œமாபெரும் க்தி. இது எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தக்கூடிய வாகம். ஒரு நாட்டின் எதிர்கால ந்ததியாக இவர்கள் இருப்பதால் அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் எந்தச் ந்தர்ப்பத்தி லேயும் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை அல்லது ஜனநாயக உரிமையைத் தவறாகப் பயன்படுத்துதல், கருவியாகப் பயன்படுத்துதல் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்தது சரியானதே. அதற்கான முழுமையான காரணம் அவர்களிடத்தில் உள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ்த் தேசிய இனத்தின் சின்னமாக விளங்கி வருகின்றது. இதற்காக காலத்துக்குக் காலம் அது பல்வேறு வகையில் விலை கொடுத்துள்ளது. வரலாற்றுப் பதிவுகளை, சாதனைகளைக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னதான அரசியல் காலத்திலும் விடுதலைப் போராட்டக் காலத்திலும் வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை தொடர்பில் தனது காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்தது. போருக்குப் பின்னர் நிர்வாக நிலையில் ஏற்பட்ட தளம்பல் தமிழ் மக்கள் பிரச்சினையில்  முழுமையான பங்களிப்பைப் பாதித்துள்ளது எனலாம்.
ஆனால், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிர்வாகத்தினரும் மாணவர்களும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் தங்களால் ஆன செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்காக அவர்கள் பல்வேறு வகையில் நெருக்கடிகளையும் ந்தித்து வருகின்றனர்.
அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் வீதியில் வைத்து தாக்கப்பட்ட போது "எங்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்புத் தர வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு ரியாகப் பதில்தர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
மாணவர்கள் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தது ரியானதே. அதற்கான முழுமையான காரணம் அவர்களிடத்தில் உள்ளது.
ஆனால், ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்ட விதம், மாணவர்கள் நடந்துகொண்ட விதம் பதிலுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறிய பதில் இவை மூன்றுமேஅந்தந்தத் தரப்பினரது உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது.
க மாணவன் நடு வீதியில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவனுக்கும் தமக்கும் பாதுகாப்புக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் உருவப்படத்தை எரியூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணாடியையும் கல்லால் எறிந்து உடைத்திருந்தனர்.
வேசம், ஆக்ரோஷம், ஆத்திரம் இவை எந்தளவுக்கு தாம் அடைய நினைக்கும் முயற்சியில் வெற்றியைத் தரும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய அதேவேளையில் நாம் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்பதை முற்கூட்டியே தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களிடத்தே உருவாக வேண்டும்.
உண்மையில் க மாணவன், பல்கலை மாணவன் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட ம்பவத்தை பல்கலைக் கழகச் மூகமேதட்டிக் கேட்க வேண்டிய சூழ் நிலையில் அவர்கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டுக்கொண்டனர் என்பதே உண்மை. இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மீது கொண்டுள்ள வித்தியாமான பார்வை காரணமாகியது. இது கடந்த வருடத்தில் நடைபெற்ற ம்பவங்களிலும் தெளிவாகியிருந்தது.
எங்களுக்கு வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்புத் தாருங்கள் என மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு  பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கண்டன அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இதில் தவறு இரண்டு பக்கமும் இருப்பதால் யாரும் பொறுப்புக்கூற முடியாதவர்களாக உள்ளனர்.
ரே நாளில் மாணவன் தாக்கப்பட்டதற்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும் கண்டன அறிக்கையை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டிருந்தது. இங்கு கண்டன அறிக்கைகள் இரண்டும் எது சார்ந்து விடுக்கப்பட்டது என்பது கேள்வியாகவுள்ளது. மாணவர்களைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக மாணவன் தாக்கப்பட்டதையும் கண்டித்திருக்கலாம் என்று ஒருவர் பல்கலைக்கழக நிர்வாகத்தை குற்றஞ்சாட்டினார். இன்னொருவர் ""படிச்துகளுக்கு எதை எப்படிச் செய்கிறது என்று தெரியாதோ. யாரோ ஒருவன் அடிச்சிட்டுப் போக அந்த அம்மாவுடன் ஏன் ண்டைக்குப் போவான்'' என்றார்.
இந்த முரணான கருத்து வெளிப்பாட்டிற்கு காணரமாகி இருக்கிறது பல்கலைக்கழக மூகம். இங்கு மாணவர்கள் தமக்கான உரிமைகளை உரிய ந்தர்ப்பத்தில் பயன்படுத்திக்கெள்ள வேண்டும். அப்போதுதான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதோடு தமது உண்மை நிலைப்பாட்டையும் வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஏட்டிக்குப் போட்டி அறிக்கை விடுவதாலோ கண்டிப்பதாலோரோக்கியமான முடிவுகள் எதுவும் கிடைத்துவிடா.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் மாணவர்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னிற்க வேண்டும். பதிலாக சுயமான சிந்தனையுடன் செயற்படுவது இன்னும் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்கும்.

 நன்றி-சூரியகாந்தி (27.05.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: