ஞாயிறு, ஜூன் 17, 2012

வணங்குவோம் மாவீரரை


தமிழ் மக்களின் வீரம் நிறைந்த வரலாற்றில் 1970 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி முற்றிலும் மாறுபட்டது. இன ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு இளம் முகத்தின் பிரதிபலிப்பு உலகநாடுகள் வியக்கத்தக்க வகையில் ஒரு போராட்ட அமைப் பைத் தோற்றுவித்திருந்தது. அதன் முடிவும் அந்த வியப்பைத் தொட்டு இன்று தமிழ்மக்கள் கைகளிலிருந்து நழுவிப்போனது.
இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பங்கள் துயரங்களுக்கு அப்பால் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு இவை எல்லாவற்றையும் மறந்து ஓர் இனத்தின் விடுதலை நோக்கிய பயணமாக நோக்கப்பட்டது.
இந்த வரலாற்றுக் காலத்தில் மரபுவழிப் போராட்டம் வளர்ச்சியடைந்து உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான நவீனத்துவம் நிறைந்த போராட்டமாக திடீர் வளர்ச்சி கண்டது. அந்த வளர்ச்சி திடீரென மறைந்தும் போயிற்று.
இத்தனைக்கும் மத்தியில் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து மடிந்துபோனவர்களின் நிலை என்னவென்றே புரியாது மறைந்துபோகும் நிலையில் புதிய அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏதேதோ கேள்விகளை உருவாக்கியுள்ளது.
"தமிழ் மாவீரர்களின் படங்க ளைப் பெற்றோர்கள் தங்களது வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அவர்கள் எங்களுக்கு எதிராகப் போர் புரிந்தபொழுதும் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது? இதனால் அந்த வீரர்க ளின் படங்களை வீடுகளில் தொங்க விடுவதில் தவறில்லை.'' இது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி பிரிகேடியர் ரேணுக ரொவலின் கருத்து.
அண்மையில் திருமுருகண்டி நில சுவீகரிப்பு தொடர்பான பிரச்சினை குறித்து அந்தப் பகுதி மக்களைச் ந்தித்தபோதே தளபதி இந்தப் பென்னம்பெரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏன் துயிலும் இல்லம் உடைக்கப்பட்டது?
2009 போர் முடிவுற்ற கையோடு இராணுவத்தினர் வன்னியில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை அடியோடு அழிப் பதையே தமது முதல் கட்டாய கடமையாக நிறைவேற்றியிருந்த னர். இதில் மாவீரர் துயிலும் இல் லங்கள், மாவீரர் மண்டபங்கள், மாவீரர் சிலைகள், விடுதலைப் புலிகளின் வரலாறு கூறும் இடங்கள் தமிழ் கலை பண்பாட்டு அம்ங்கள் கூடியிருந்த இடங்கள் விடு தலைப்புலிகள் சார்ந்து இயங்கிய நிறுவனங்கள் போன்ற எல்லாமே அகப்பட்டன.
போரின்போது சாவடைந்த போராளிகளைப் புனிதமான இடத்தில் புதைத்து அதைக் கோயிலாக விடுதலைப் புலிகள் மாற்றியி ருந்தனர். அந்த கல்லறைத் தெய் வங்களைப் பூசிக்கும் நாளாக நவம்பர் 27 விழாக் கோலம் பூணும். தமது உறவுகளை இழந்தவர்கள் அந்த உறவின் பெயரால் கட்டப் பட்ட கல்லறைக்கோ நினைவுக் கல்லுக்கோ அந்த நாளில் தீப மேற்றி தமது மனக் கவலைகளை போக்கிக் கொள்வதோடு உணர்வு பூர்வமான நிகழ்வாகவும் அதனை ஏற்றுக்கொள்வர்.
வடக்குக் கிழக்கில் பெரும் பாலான தமிழ் மக்களுக்கு இது ஒரு கல்லறைக் கோயில். இந்தக் கோயில்களே இராணுவத்தின் இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்பு வேலையாக இருந்தது. கனரக வாகனங்களின் உதவியுடன் இரவோடு இரவாகக் கல்லறைகள் வாரி அள்ளப்பட்டு வேறு தேசங்க ளில் கொட்டப்பட்டன. துயிலும் இல்லங்கள் இருந்த இடம் தெரி யாது மறைந்துபோக எருக்கலை கள் மட்டும் செழிப்போடு வளர்ந்து பூத்துக் குலுங்கின. அந்தத் தேசம்  உடல்கள் விதைக்கப்பட்ட பூமி என்பதை இன்று எருக் கலையே பறைசாற்றி நிற்கிறது.
இப்போது கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதியின் இந்தப் புதிய அறிவிப்பு தமிழ் தாய்களின் மனங்களில் பின்னர் "ஏன் எங்கள் பிள்ளைகளின் கல்லறை களை அழித்தார்கள்'' என்பதாய் மாறிவிட்டது. போரின் இறுதியில் தம்மிடம் இருந்த விடுதலைப் போராட்டம் ம்பந்தமான ஆவ ணங்கள் அனைத்தையுமே தமிழ் மக்கள் கடலில் தூக்கி வீசி விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற் பட்டது. அவற்றை வைத்திருந் தால் இராணுவத்தினர் புலிச்சாயம் பூசிவிடுவார்கள் என்ற பயப்பீதி யில் போரில் சாவடைந்த தங்கள் பிள்ளைகளின் திருவுருவப் படங் களைக்கூட அவர்கள் உடைத்து எறிந்து விட்டே செல்ல வேண்டி யிருந்தது. பெரும்பாலான பெற் றோர்களிடம் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களே இல்லை. இந்த சூழலில் போரின்போது மரணமான வீரரின் திருவுருவப் படத்தை வீட்டினில் தொங்கவிட தமிழ்த்தாய்க்கு உரிமை உண்டு என்ற அறிவிப்பால் அழிந்துபோன படங்கள் மீண்டுவிடுமா? திட்ட மிட்டு அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் புத்துயிர் பெறுமா? அவர்களே அழித்தார்கள். வணங்க அவர்களே அனுமதிக்கிறார்கள். இவையே தமிழ்த் தாய்களின் மனங்களில் எழுந்து நிற்கும் கேள்விக் கணைகளாய் உள்ளன.

பூமுகன்
நன்றி- சூரியகாந்தி (17.06.2012) 

Post Comment

கருத்துகள் இல்லை: