செவ்வாய், பிப்ரவரி 07, 2012

கிளிநொச்சி ""கொலை வெறி''


Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்கள் இயோடு வரும்போது எல்லோரும் தமக்கு இருக்கக் கூடிய இரசனையுடன் அவற்றை நோக்குகின்றனர். இவை ஆளுக்காள் வேறுபடும். “Why this kolaveri diசுபாடலை "யூரியூப்' ஊடாக இதுவரை 39,529,223 பேர் பார்த்துள்ளனர். அதில் 220,252 பேர் தமக்குப் பிடித்திருக்கிறது என்றும் 12,804 பேர் தமக்குப் பிடிக்கவே இல்லை என்றும் கூறியுள்ளனர். ஏனையோர் பார்த்துடன் நிறுத்திவிட்டனர்.
இது தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மக்கள் அபிப்பிராயத்தில் சிறுபாதி மட்டும்தான். கலை இரசனைக்காகத்தான் கொலை வெறி பாடப்பட்டது. காதலின் தோல்விக் காகக் கொலை வெறிபாடப்பட்டது. ஒரு பெண்ணின் அழகும் அவளின் குணமும் பற்றிப் பாடப்பட்டது. அதை அந்த மாத்திரத்திலேயேவிட்டுவிடலாம்.
ஆனால், நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி கொலை செய்யப்படுவதை எவ்வாறு பார்ப்பது? திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான மொழியும் செம்மொழியும் எனப் போற்றப்படுவது தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது இந்த மொழி, கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த மொழியாகப் பேசப்படுகின்றது. இதன்மீது பொறுப்பற்றவிதமாக நடந்துகொள்வதென்பது அனாகரிகமானது.
எம்நாட்டில் பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு இப்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதன்மீது ஆட்சியாளர்களுக்கு கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அரசு தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் வர்த்தமானிப் பத்திரிகை, துறைசார் திணைக்களச் சுற்றுநிருபங்கள், காட்சிப் பலகைகள், விளம்பரப் பலகைகள் எல்லா வற்றிலும் தமிழ்மொழி கொச்ப்படுத்தப்படுகின்றது.
அரசுமட்டும் சிங்களத் தலைவர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் வாதிகளும் செயற்பட்டுள்ளனர். இப்போதும் ஒட்டி உறவாடுகின்றனர். அரசு கட்டமைப்பில் பெரும்பாலான துறை களில் தமிழ் அறிந்த தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தத் தோரணை உயர்மட்டத் திலிருந்து கீழ் மட்டம்வரை தொங்குகிறது.
அவர்கள் சொன்னால் சரி என்று தலையாட்டிப் பழகிவிட்டதால் பிழையானதைக் காட்டினாலும், சரி என்று தலை அக்கும் சக்திகளாக தோரணைகள் மாறிவிட்டன.
போதாக்குறைக்கு இலாபநோக்கிலான நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளும் தமிழைக் கொலை செய்வதில் ஆர்வமாக உள்ளன. விளம்பரத்துக்காக இவற்றால் அமைக்கப் படும் பெயர்பலகைகளில் இந்த வண்டவாளம் புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்து வீதிகளில் இந்த அலங்கோல அலங்காரங் களை நாம் தினமும் பார்க்கிறோம்.
கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சு நெல் வர்த்தக நிலையம் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தது. விவசாய நிலப் பகுதியில் இந்த வருகை மகிழ்ச்சியானதுதான். ஆனால் அதன் பெயர்பலகை அமைந்ததுதான் மக்களின் நெல்சந்தைப்படுத்தும் கனவையும் கலைத்தது .
களஞ்சியசாலை கட்டடத் தொகுதி கிளிநொச்சி என்ற வசனம் "கனஞ்சியசாலைக் கட்ஷடத்தொஞதி கிலிநொச்சி' என்று எழு தப்பட்டுள்ளது. டீஜிற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பெயர்பலகை யில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களது திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள் ளன.
இதுமட்டுமல்ல கிளிநொச்சியில் அமைந்துள்ள தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பெயர்ப் பலகையில் கிளிநொச்சிக்கு பதிலாக "கினிநொச்சி' என எழுதப்பட்டுள்ளது. கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங் கத்துக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் ஆங்கிலத்தில் A9 வீதி எனவும் தமிழில் "யு 9' வீதி எனவும் எழுதப்பட்டுள்ளது.
""எவ்வளவு காச் செலவழிச்சு செய்து போட்டினம் இனி. எப்பிட மாத்திறது? பிழை யெண்டு சொன்னாலும் எங்களில அவையள் வச்சிருக்கிற நம்பிக்கை போயிடும். ஏன் எங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னண்டாலும் செய்யட்டும்'' என்று பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விலக தமிழ் தெரியாதவர்கள் இன்னும் தமிழைக் கொச்ப்படுத்தியவண்ணமே உள்ளனர்.
எல்லா விடயத்திலையும் அவையள் தானே முடிவெடுக்கிறது. பிறகு எப்படி கொலை வெறிய மாத்தமுடியும். முடிஞ்சா பக்கப்பாட் டுக்கு தந்தனத்தோம் தான் பாடணும்.. *
நன்றி -உதயன் சூரியகாந்தி(29.01.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: