திங்கள், ஜனவரி 23, 2012

அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்



இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமா 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.

இலங்கையின் அபிவிருத்தியில் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் துறையாக பெருந் தெருக்கள் மற்றும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இருப்பதாக அரச தரப்பு மார் தட்டிக்கொள்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ் சாலை அமைப்பு என வீராப்புப் பேசும் அரசு இன்னும் பல அதிவேக வீதிகளை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்க வுள்ளதாக உறுதி கூறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு வீதி வலையமைப்பு முக்கியமானதாக இருந்தாலும் ஏனைய துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைச் சமவேகத்தில் நகர்த்த முடியும்.
இலங்கையில் இப்போது இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைசார் கட்டமைப்புக்களுக்கிடையில் வேறு பாடுகளை உருவாக்குவனவாக உள்ளன.
இலங்கை அரசால் நடைமுறைப்ப டுத்தப்படும் அபிவிருத்தி வேலைகள், மக்களது அடிப்படைத் தேவைகள், அன்றாடத் தேவைகளுக்கு விடைகாணாது புதிய பாதையில் செல்வதை உணரமுடிகின்றது.
அண்மையில் 2011.11.27 அன்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இப்போது பாவனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களே மக்களது தேவைகளுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணரவைத்துள்ளன.

அதிருப்திகளின் அதிவேகம்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது அவற்றின்மீது கற்கள் வீசப்படுகின்றன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்னர்.
வாகனங்களுக்கு கல்லெறிபவர்கள் தொடர்பில் விழிப்பு குழுக்கள் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கண்களைக் கட்டிவிட்டு கல்வீச்சுக்கள் தொடர்கின்றன.
வீதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார்சைக்கிள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்த வீதியில் ஏற்படும் விபத்துக்கள், இடையூறுகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பட்டைப் பேணவேண்டும்,வீதி ஒழுங்கைப் பேணவேண்டும், விபத்துக் களிலிருந்து தப்பிக்கவேண்டும். இடைநடுவில் வாகனங்களை நிறுத்திக் கல்லெறி காரர்களை இவர்களால் ஒன்றும் செய்து விடமுடியாது.வாகனம் நிறுத்தப்பட்டால் அடுத்த கணமே விபத்துத்தான்.

நாய்களுக்கும் அதிருப்தி

சாலை பாவனைக்குவிடப்பட்டதும் திடீர் திடீரென விபத்துக்கள் நிகழ ஆரம்பித்தன. காரணம் புரியாது கண்காணிப் பாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது தெருநாய்கள் வீதியால் குறுக்கறுப்பது தெரிய வந்தது. ஏற்கனவே வீதிக்கு வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாய் களுக்கு அது போதாது. ஆடு அல்லது மாடு அதிலிருத்து தப்பிக்க முடியும். யானை கூட அண்மையில் இந்த வீதியைக் குறுக் கறுத்தது. சில இடங்களில் மண்அணை போடப் பட்டிருந்தாலும் எல்லா இடங் களுக்கும் அவை விஸ்தரிக்கப்டவில்லை.
நாய்களின் குறுக்கறுப்பால் வீதி திறக் கப்பட்ட அடுத்த நாளே வாகன விபத் தொன்று நடந்தது. திறக்கப்பட்ட 72 மணித் தியாலங்களுக்குள் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றன. 2 மாதங்களுக்குள் 80 விபத்துக்கள் பதிவாகியன. இவற்றில் பலவுக்கு நாய்கள் மீதே பழிபோடப்பட்டது. அவை யும் பலி கொள்ளப்பட்டன.
மஹிந்தவின் சிறப்பு உத்தரவு நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்று. ஆனால் அவரின் கனவான அதிவேக சாலையும் அதில் பயணிக்கும் வாகனங்களும் நாய்களைக் கொலைசெய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை அவர் எந்தத் திட்டத்தைக் கொண்டு சீர்செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிதாக ஏதாவது திட்டம் அவருக்குள் இருந்து வரும்வரை.
இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் நகர்பகுதியில் ஏற்படும் வாகன நெருக் கடியைக் குறைப்பது, வேகமான போக்கு வரத்து, பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளுதல் போன்றனவாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவை இதுவல்ல. இப்போதைக்கு எங்களது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டமாகச் சர்சதேச நிலையிலான அபிவிருத்திகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எங்கள் வயல்காணிகள், மேட்டுக்காணிகள் என்பவற்றின்மீதே நீங்கள் உல்லாச சவாரி செய்கின்றீர்கள். அதனால் ஆத்திரமடைந்தே நாங்கள் கற்களை வீசுகிறோம். எங்கள் வளமான காணிகள்மீதே இந்த வீதி அமைந்திருக்கிறது என்று கல்லெறி காரர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகவே வீதிக்குவந்து கற்களை வாகனங்கள் மீது அவர்கள் வீசுகிறார்கள்.
அபிவிருத்தியின் தேவையில் இதுவும் ஒன்றுதான். அது எப்போது தேவை என்பதும்,மக்களது இப்போதய தேவை என்னவென்றும் தீர்மானிப்பது அரசுதான். எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். *


பணிஆரம்பம்:2003
நிதி உதவி:ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசு.
நிர்மாணச் செலவு:சுமார் 77 பில்லியன் ரூபா.
தூரம்:கொழும்பு கொட்டாவிலிருந்து காலி பின்னது வவரை 100 கிமீ (கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ வரை)
தடை:100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள், அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற் படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கு இந்தவீதியில் தடை
நுழைவாயில்:08. கொட்டாவை, கஹதுடுவ, களனி கம, வெலிபின்ன, குறுந்துஹ, தாபிம, தொடங்கொடை, பத்தேகம, பின்னதுவ.
வேகம்:80120 கிமீ(மணிக்கு)
கட்டணம்:

கார்,கெப்ரக வாகனம்,9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங் கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபா,9 ஆசனங்களுக்கு அதிகமான பஸ் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ்களுக்கும் 700 ரூபா, 22 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபா, ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா.



நன்றி உதயன்-சூரியகாந்தி (௨0௧௨. 2௨.01)

Post Comment

கருத்துகள் இல்லை: