இளைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

வாழ்வைக்குடிக்கும் மது



நாகரீகப் பழக்கங்களில் ஒன்றாக இன்று மதுப்பாவனை முன்னிலை பெறுகிறது. நுகர் இன்பங்களுக்காக ஆரம்பிக்கும் இந்த குடித்தல் ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து சமுதாயம்வரை சீர்கெட்டுச் செல்லும் அளவுக்கு மாறியிருக்கிறது. இளவயதினர் நாகரீக மோகத்தின் உந்துதல் காரணமாக தீய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். அதற்கு அவர்க ளால் இயன்றளவு சமூக அந்தஸ்து வழங்கி மற்றவர்கள் இடத்தில் இருந்து தம்மை நாகரீகப்படுத்திக் கொள்கின்றனர்.