ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

நியாயம் கிடைக்குமா ? ஏங்கும் விவசாயிகள்


""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''
""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''
"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''
முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.

"அநேகநாள் பழக்கத்தினாலே நாளைக்கு என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டியது.''
--
ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை ஈழத்தில் உருவான ஒரு அற்புத படைப்பு. சி.வைத்திலிங்கத்தின் எண்ணங்கள் இளையோடிய இந்தச் சிறுகதை எல்லோர் மனதிலும் பொறிபோலத் தைப்பது தவிர்க்க முடியாதது.
ஒரு ஏழை விவசாயியின் கனவுகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுசெல்லும் இந்தக் கதையில் ராமு என்ற சிறுவனின் பாத்திரப் படைப்பும் அவனது ஏக்கமும் உணர்ச்சிபூர்வமானது.
இன்று இப்படித்தான் பல விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஏக்கத்துடன் கழிக்கின்றனர். அவர்களது ஆசைகளும் கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் ஏதோஒரு கெடுதல்களால் நெருப்பில் பொங்குவதுபோல மாறிவிடுகின்றன.
நவநாகரீகம் வளர்ந்துவிட்ட இன்று விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நெருக்கடியே தோன்றியுள்ளது. அவர்கள் ஏனைய வாழ்க்கைத் தேவைகளுக்காக ஒவ்வொருநாளும் போராட வேண்டியவர்களாகவே மாறியுள்ளனர்.
கிளிநொச்சியில் ஒரு விவசாய குடும்பஸ்தர் தனது நாளாந்த வாழ்க்கையைப் பூர்த்தியாக்குவதற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் வால்களையும் விவரிக்கும்போது, ஈழத்து எழுத்தாளர் சி.வைத்திலிங்கம் படைத்த "பாற்கஞ்சி'' படைப்பு ஞாபகத்துக்கு வருவது தவிர்க்கமுடியாமல் போயிருந்தது.
கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கைக்கான அறுவடை முடிவுற்றதும் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யப் பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அர அதிபர் தெரிவித்திருக்கிறார்.
ஏழை விவசாயிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இருப்பதற்கு, உறங்குவதற்கு, விருந்தாளி வந்தால் உபரிப்பதற்கு ஒரு உருப்படியான வீடற்ற விவசாயிகளுக்கு தாம் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்குச் ந்தைப்படுத்த முடியும் என்ற செய்தி அடுத்த ஆண்டில் அவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலங்களில் இப்படியான நெல் கொள்வனவு எந்தளவுக்கு நடைபெற்றது என்பதை அந்த ஏழை விவசாயி புரட்டியபோது அந்தக் கனவுகளெல்லாம் அவர்களிடத்திலிருந்து ட்டென்றேகலைந்துபோவதாகத் தென்பட்டது.
"இந்த ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைமூலம் கிடைக்கும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தீர்மானிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கடந்த வருடம் காலபோக நெற்செய்கையின்போது நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி நெல்லைச் ந்தைப்படுத்த முடியும். இதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி.
கடந்தவருட காலபோக நெற்செய்கையின்போது சிவப்புநாடு ஒரு கிலோ 28 ரூபாவும் ம்பா 32 ரூபாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நெல் கொள்வனவு இடம்பெற்றால் விவசாயிகளுக்கு மூடை ஒன்றுக்கு 1,680 ரூபா கிடைக்கும். ம்பாவுக்கு 1,920 ரூபா கிடைக்கும். தனியார் இவற்றைவிட கூடுதல் விலை கொடுத்துக் கொள்வனவு செய்தால் விவசாயிகள் தமது உற்பத்தியை நல்ல வகையில் ந்தைப்படுத்தலாம். ஆனால் ""தவிச் முயல் அடிக்கும்'' தனியார் துறையினர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து மிகக் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்ய முன்வருகின்றனர்.
நாளாந்த வாழ்க்கையுடன் போராடும் விவசாயிகள் தம்மிடம் இருக்கக்கூடிய பெறுமதி வாய்ந்த ஏதோஒரு பொருளை அடகு வைத்தோஅல்லது ஒரு நம்பிக்கையானவரிடம் கடன் பெற்@றா விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது அடகை மீள்வதோஅல்லது கடனைச் செலுத்துவதோதான். அதற்காக அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்றேஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மாறாக வீட்டில் நெல்லைப் பராமரிப்பதற்கு களஞ்சியவதிகூட அவர்களிடம் இல்லை. இதனாலும் அகப்படும் விலையில் நெல்லை விற்கவேண்டியுள்ளது.
அந்த ஏழை விவசாயி குறிப்பிடுவதும் இதுதான்.
ப.நோ.கூ. ங்கம் இதுவரை காலமும் எங்களிடம் நெல்லைக் கொள்வனவு செய்தது. எப்படியென்றால் விவசாய அங்கத்தவர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நெல்மூடைகள் என்ற அடிப்படையில் (மிகச் öசாற்ப அளவே) தான். அதற்கும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். நெல்லைக் கொடுத்துவிட்டால் அதற்கான பணத்தைப் பெறுவதற்கு நீண்டநாள் அலைய வேண்டும். மிகுதி நெல்லை வேறு யாருக்காவது அவர்கள் கேட்கும் விலையில்தான் கொடுக்க வேண்டும். இப்படி இழுபறிப் படுவதைவிட ஐஞ்சுபத்து நட்டம் வந்தாலும் யாருக்காவது முழுவதையும் கொடுத்து காசுகையில் கிடைத்தால் அதுதான் எமக்கு உதவியாக இருக்கும். நியாய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ங்கங்கள் முன்வந்தால் மட்டும் போதாது. எங்களது தேவைகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் அதுதான் எங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் கேட்டதைப்போல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கமுடியும். கடன் தொல்லையாலும் அன்றாட வாழ்க்கைக்காகவும் எப்படியோ நெல்லை விற்றாக வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் ஒரு நல்ல தீர்வை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இப்போதைக்குப் பொருத்தமானது என்கிறார் அந்த ஏழை விவசாயி.
உண்மையில் வன்னியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை வதிகள் இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்றும் குடிசைகளிலேயே தங்கியுள்ளனர். இவர்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் பூரணப்படுத்தப்படாது அரசின் அபிவிருத்திகளை அரசியல் போக்கில் செல்கிறது.
இந்த நிலையில் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கக் கூடியவர்கள் தங்கள் உற்பத்தியை நியாயமான விலையில் ந்தைப்படுத்துவதற்கு பக்கபலமான ஒரு வழியையே எதிர்பார்க்கின்றனர். பெயரளவில், பகுதியளவில் அவர்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தை எதிர்பார்க்கவில்லை. இதற்கேற்பவே செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
வன்னியிலும் முருகேசனைப் போலவும் காமாட்சியைப் போலவும் ராமுவைப் போலவும் பலர் வாழ்கின்றனர். இவர்களது ஆசைகளும் எண்ணங்களும் கற்பனைகளும் தினமும் சிதைந்து போகின்றன. முருகேசனது கனவுகளை ஒரு மழை அழித்துச் சென்றது. அது முருகேசனின் கனவு மட்டுமல்ல. ராமுவின் பால்கஞ்சி என்ற அவாவையும் அடியோடு அழித்துவிட்டிருந்தது. இதுபோல வன்னியில் இப்போது மழை மேகங்கள் ழ்ந்திருப்பது பல விவசாயக் குடும்பங்களின் கனவுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கின்றது. இயற்கையின் நியதிகளை மனிதனால் வெல்லமுடியாத போதும் மனிதனது ஆசைகளையும் தேவைகளையும் உரிமைகளையும் இன்னொரு மனிதனால் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளின் எதிர்கால வாழ்வுக்குப் பொருத்தமான அபிவிருத்தி நோக்கிலான திட்டமொன்று கட்டாயமாகின்றது. பெயரளவிலோ சொல்லளவிலோ சில காரியங்களை அறிவிப்பதை விடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பூரணம் அடையக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதுமே இப்போதைய தேவையாக உள்ளது.
அர அதிபரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ப.நோ.கூ. ங்கங்கள் முழு அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைக் கொள்வனவு செய்யுமா என்பது அவர்களிடத்திலே கேள்வியாக மாறியுள்ளதால் உண்மையான கரினையுடன் இந்த அறிவிப்பைச் செயற்படுத்த வேண்டியது தார்மீகப் பொறுப்பாக உள்ளது. இதுவே ஏழை விவசாயிகளின் கனவுக்கு நல்லதொரு விடையாக அமையும். *
நன்றி-உதயன் சூரியகாந்தி (12.02.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: