செவ்வாய், ஜனவரி 07, 2014

பதவி பங்கீட்டில் ஆபத்து தவிர்

மஹிந்த அரசின் கீழ், நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றி நடைபோடு வதாக அரச நிர்வாக மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையே அரசு சார்பு அரசியல்வாதிகளும் செப்புகின்றனர். குறிப்பாக கைத்தொழில் நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு, கிராமிய, நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உட்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவ தாகவும், இவற்றின் மூலம் மக்கள் பயனடைந்து வருவதாகவும் தக வல்கள்  வெளிக் கிளம்புகின்றன. 

தேவைக்கு அதிகமாக சேவை  செய்து வருகிறோம் என்பதே இதன் மூலம் அரசு கூற முற்படும் செய்தி. ஆனாலும், மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
அத்தியாவசிய, ஆடம்பர பொருள்களின் விலை அதிகரிப்பு, கட்டம் கட்டமாக மக்களை நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறது. இவற்றுக்கான தேவை இன் றிமையாத நிலையில், மக்கள் தமது நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாய் படாதபாடுபட வேண்டியுள்ளது. 

ஓய்வின்றி உழைத்தால்கூட இந்தக் கால வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்ய முடியாத நெருக்கடி நிலைக்கே மக்கள் தள்ளப்பட்டுள் ளனர். குறிப்பாக, இலங்கையின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றதாக வேலைக்கான ஊதியம் அமைய வில்லை. அது சரி அரைவாசியால் குறைந்து நிற்கிறது.
இப்படியான சூழலில்தான் அரசு தனது வெற்றிக் கோங்களை விளாசி மேடைகளில் முழங்கி வருகிறது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப் பட்டு அரசு சேவையில் உள்வாங் கப்படுவர் எனக் கூறி நாடு முழு வதும் இணைத்துக் கொள்ளப்பட்ட  பட்டதாரிகள், ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போதுதான் சேவை யில் இணைத்துக் கொள்ளப்படு கின்றனர்.  சொல்லப்போனால், அர சின் செயற்படுத்தல்திறன் என்பது அரைவாசிக் காலத்தை அதிகரித்து வீணடிப்பதாகவே இருக்கிறது. 

நியமனம் பெற்றவர்கள்போக அந்தச் சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு கார ணத்துக்காகத் தம்மைப் பயிலு நர்களாக இணைத்துக் கொள்ள முடியாத பட்டதாரிகள் பலர் இன்றும் வேலையற்று இருக்கின்றனர்.
இவர்களை அரச அலுவலர்கள் பல தடவை அழைத்து பதிவுகளை மேற்கொண்டபோதும், பயன் ஏதும் கிட்டவில்லை.   இதனால் அவர்கள் வேலையற்றோர் பட்டியலிலும் வேலைதேடி அலைவோர் பட்டியலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கின் றனர். 

சலுகை நியமனங்கள் 
தற்போதும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவை அரசியல் சலுகை, அரசியல் தேவைகளுக்காக வழங்கப்படுகின்றன. நீண்ட நெடுங்காலமாக அர்ப் பணிப்போடு தொண்டர்களாக பணியாற்றிய பலர் புறக்கணிக் கப்பட்டு, தகுதியற்ற பலர் இணைத் துக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு  வேறு பல காரணங்கள் கூறப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் நிரா கரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின் றனர். 

பல்கலைக்கழக ஊழிய நியமனங்களின்போதும், சிபாரிசுப்பட்டியலே செல்வாக்குச் செலுத்துவதாக பாதிக் கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவிக் கின்றனர்.  உண்மையான தகைமை உள்ளவர்கள்கூட இதன்போது புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது அவர்களது வாதம்.

எந்தவொரு அரச நிறுவனமும் தனது திருகுதாளங்களை வெளியாருக்குத் தெரிவிப்பதில்லை. தெரிய வந்தாலும், அவற்றைச் சரி என்று ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்கின்றன.

இவ்வாறான பாரபட்சங்கள் காரணமாகப் போட்டிப் பரீட்சைகளில் சித்தி அடைபவர்கள்கூட புறக்கணிக்கப்படும் சம்வங்கள்  அதிகரித்துள்ளன. குறிப்பாக லஞ்ச  முறைமையும், வேலை வாய்ப்பும்   இலங்கையில் வியாபார நடவடிக்கை களில் உச்சக்கட்டத்தை  எட்டியுள்ளன.

பல்கலைக்கழகங்களில் தொழில் முறைக் கல்வி இன்றளவும் சாத்திய மாகாத நிலையில், காலத்தை வீணடிக்கும் கற்கை முறைகளாகவே  உயர்கல்வித் தகைமை கள் காணப்படுகின்றன. 

சாதாரணதர, உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் அரசு சேவையில் உள்வாங்கப்பட்ட ஒருவருக்கு சமமாகவோ அல்லது அதற்கு கீழ் நிலையிலேயோ பட்டப் பெறுபேறு பெற்றோர் பணியாற்றும் நிலையுள்ளது. இது இரு தரப்பினரிடமும் வினைத்திறனற்ற நிலையை ஏற்படுத்துகிறது.

தொழிற்கல்விசார் கட்டமைப்புகள் சரிவரப் பின்பற்றப்படாமையே இவற் றுக்கான காரணம் எனச் சுட்டிக் காட்டப்பட்டாலும், அதிலிருந்து விடு பட்டு, பிழைகளைத் திருத்தி வேலை வாய்ப்பு வழங்குவதில் எவரும் அக்கறை செலுத்தவில்லை.

துறைசார்ந்த கட்டமைப்புகளில் நிகழும் இவ்வாறான தவறுகள், தொழில் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன்,  உயர் கல்விக்கான தேவைப்பாடுகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளன. இந்த உணர்தல், எதிர்காலத்திலும் நீடிக்கு மானால் உயர்கல்விக்கான தேவைப்பாடுகள் இல்லாமலேயே போய்விடும்.  இப்போதைக்கு இந்தக் கருத்து சிரிப்புக்கு உரிய தாயினும், அதிகரிக்கும் பொருளாதார, விலைவாசி உயர்வு  வெகு விரைவில் இதனை உறுதி செய்யும்.

திறந்த சமூகக் கட்டமைப்புக்குள் காணப்படும் ஆடம்பரப் போக்கும், எளியோர் மத்தியில் தொழில் திறன் கற்றலுக்கான தேவையை இல்லாமல் செய்து கொண்டு இருக் கிறது.  இதனால் எதிர்காலத்தில் தொழிற்துறையில் கேள்வி அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

வருடந்தோறும் நாட்டில்   உள்ள பல்கலைக்கழகங்களில்  இருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு,  அவர்களின்  தகைமைக்கேற்ப வேலைவாய்ப்பை  வழங்கக் கூடிய  கொள்ளளவை, அரச நிறுவன  கட்டமைப்புக்கள்  கொண்டி ருக்கவில்லை. புதிய வாய்ப்பு களை உருவாக்கும் அரசின் செயல் திறனும் போதியதாக இல்லை.

இதை விடுத்து, அரசியல்  உள் நோக்கங்களுக்காக  இந்தக் காலத்தில் ஏற்படுத்தப்படும்  அபிவிருத்தித் திட்டங்கள்  மனிதவாழ்தகவை கேள்விக்குறியாக்குவது டன்,  முரண்பாடுகளையே  தோற்று விக்கும். இதனை  இலாப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் உணரத் தயாராக வேண்டும். 

நன்றி - சூரியகாந்தி (05.01.2014)


Post Comment

கருத்துகள் இல்லை: