திங்கள், ஜூன் 04, 2012

வடக்கு, கிழக்கு படைகளின் பூமியாம்


நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஓரிடத்தில் வடக்குககிழக்கில் இராணுவப் பிரன்னத்தை குறைத்தல் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய போர் பொது மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இது இப்போது இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் முழுமையான சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் கனவை நனவாக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டா.
 கொழும்பில்நேற்று (19.05.2012)இடம்பெற்ற போர் வெற்றியின் 3 ஆம் ஆண்டு நிறைவு  விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி கருத்தை அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ர்வதேச நாடுகளுக்கு பயந்து தாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் வால் விடுத்தார்.
வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் மூன்றாண்டுகளின் நினைவை அனுஷ்டிக்கும் நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் நடைபெற்ற போது அவற்றை நடைபெறாமல் தடுக்க அர தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதோடு மக்கள் மீதான கெடுபிடிகளையும் அதிகரித்திருந்தது.
ஆனால் பலபத்தாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை போர் வெற்றி விழாவாக பெரும் எடுப்பில் சிங்கள தேசம் கோலாகலமாக நேற்றுக் கொண்டாடியது. 
ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராத நோயாக உருவெடுத்ததுடன் அவர்கள் மீது தினமும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
தேபோன்று வடக்குக் கிழக்கில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் மக்கள் வாழ்விடங்கள் பொது இடங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவி அவற்றில் குடிகொண்டுள்ளனர். இதனால் பெருமளவிலான மக்கள் இருபது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர விவசாய நிலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் போன்றனவும் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ்வாறான பகுதிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அவர்களிடம் திருப்பிக்கொடுக்கப் பட வேண்டும் என தமிழ் மக்கள் மீது கரினை கொண்ட தமிழ் அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக  வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களின் கூற்றை நிராகரிக்கும் ஜனாதிபதி "ர்வதேச  உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். எமது நாட்டில் எவரும் எந்தவொரு குற்றச்செயல்களையும் செய்ய முடியாது. பாதாள உலக, போதை பொருள் விற்பனை முகவர்களையும் நாம் இப்போது ஒடுக்கி விட்டோம். ஆனால் போரை வேறு வழியில் நடத்த முயற்சிக்கும் சிலர் வடக்குக் கிழக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுமாறு எம்மிடம் வற்புறுத்தி வருகின்றனர். இவர்களின் மனங்களில் போடப்பட்டுள்ள பயங்கரவாதம் என்னும் தடை இன்னமும் நீங்கவில்லை. இவர்களின் மனங்களில் உள்ள பயரங்கரவாதம் நீக்கப்படும் பட்த்திலேயே அவர்களாலும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்' என நேற்று புதிய விளக்கம் தந்துள்ளார் ஜனாதிபதி.
மக்களின் இயல்பு வாழ்வை வலியுறுத்தி அவர்களை சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தும் நோக்கில், ஆயுதம் தரித்தவர்களின் கெடுபிடிகளை விலக்கி மக்கள் சுதந்திரமாக நடமாடும் நோக்கில் இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் வகையில், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்த தமிழ் அரசியல் வாதிகள் இப்போது ஜனாதிபதியால் "மனப்பயங்கரவாதிகள்' என புதிய பெயர் சூட்டப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வடக்குக் கிழக்கில் அரசின் எல்லா வகையான ஆக்கிரமிப்புகளும் தொடரும் என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. இதுவே சிங்கள தேசத்தின் நிலைப்பாடு என்பதும் புரிய வைக்கப்பட்டுள்ளது.

நன்றி-சூரியகாந்தி (20.05.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: