ஞாயிறு, ஜூன் 17, 2012

விடுதலை பெற்றுத் தாரீர்


கம்பிக்கூட்டின் நடுவில் இருந்து தொலை தூரத்தை நோக்கிக் கொண்டு இருக்கின்றது இரண்டு கண்கள். நீண்ட நாள் இருளையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்களுக்கு எப்போது நிரந்தரமான ஒளி கிடைக்கும் என்பது இன்றுவரை நிரூபிக் கப்படாத விடயமாகிவிட்டது.
கைதுக்கு காரணம் ஏதும் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச் ட்டம் என்பது மட்டுமே கைதுக்கு  காரணம் என்று கூறப்பட்டாலும் தமிழ் மக் களின் ஓர் இளம் மூகம் வதைக்கூடத்தில் நெடுங்காலமாக அடைக்கப்பட்டிருப்பது அவர்களின் எதிர்காலத்தை பூச்சியத்தில் தள்ளிவிடும் நிலைப்பாடே. அவர்கள் எதிர்கால அபிலாசைகளை அணுஅணுவாக நிராகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை நிராகரிப்பதற்குத் தூண்டப்படுகிறார்கள். அம்மா என்றும் அப்பா என்றும் அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என்றும் உறவுகளின்  உணர்வுகளில் இருந்து தனிமைப்படுத்தப் பட்ட மனிதக் கூட்டமாக (உணர்வுகளை வெறுக்கும்) இவர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சார்ந்து அல்லது அரசுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற நிலை களில் தமிழ் இளைஞர்களும் யுவதிகள் ஏதோ ஒரு சாட்டை வைத்துக் கைதுசெய்யப் பட்ட இவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் என்ற பேரில் அடைத்து வைக்கப்பட்டுள் ளார்கள்.
வியாபார நிமித்தம் கொழும்புக்குச் சென்றவர்கள் முதல் வீட்டில் இரவு உறங் கிக் கொண்டிருந்தவர்கள் வரை பயங்கர வாதத் தடைச் ட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியமை, விடுதலைப் போராட்டத் திற்கு உதவியமை அரசியல்வாதிகள் போன்றோரைக் கொலை செய்ய முயற்சித் தார்கள் கொலை செய்தார்கள் என்று இவர் கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இப்போது போர் முடிவுற்று அமைதிச் சூழல், ஜனநாயகம் நிலவுவதாகக் குறிப் பிடப்படும் இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தினமும் தம்மை விடுவிக்கக்கோரும் அந்த மனித மனங்கள் இப்போது விரக் தியின் விளிம்பு வரை சென்று விட்டன. அந்த விளிம்பின் ஒரு உச்சியில் இருந்து தமிழ் மக்கள் மீது ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "உங்கள் உறவுகள் ஆகிய எங்களுக்கு விடுதலை பெற்றுத் தாரீர்'' இதுவே அவர்களது இறுதி நிலைப்பாடு.
தோ ஒரு நோக்கத்துக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் "எதிர்கால வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அந்த இளம் மூகம் தன் இனத்தின் மீதே அந்த இரங்கல் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
வருடக் கணக்கில் இலங்கையில் உள்ள சிறைகளில், ஆயுள் தண்டனைகள் விதிக் கப்பட்டவர்கள், மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள், அவயவங்களை இழந்து சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்கள், முதியவர்கள், தாய்மார்கள் என்ற பலதரப்பட்ட மூகமாக இருட்டினுள் அடைக்கப்பட்டுள்ள இந்த மனிதர்களின் கோரிக்கை எந்தளவு தூரம் சாத்தியம் ஆகும் என்பது தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலத்திலேயே தங்கியுள்ளது.
கல்விச் மூகம் மனித உரிமை அமைப்புக்கள் ,தமிழ் அரசியல் கட்சிகள் பொது நல ஆர்வலர்கள் நோக்கி நீட்டப்பட்டுள்ள இந்தக் கரங்கள் ஏற்கப்பட்டு அவர்களின் அவாவை நிறைவேற்றுவதற்கு அணிதிரள வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும்.
இப்போதும் நெருக்கடி
நீண்ட வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு  உறவுகள் பார்வையிடுவது அவர்களின் மன வேதனைகளைப் பகிர்ந்துகொள்வது என்பவை இன்றுவரை மறுக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. வாரத்தில் ஐந்து தினங்கள் சிறைக் கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டாலும் குறுகிய நேமே அந்த ந்திப்பு நிகழலாம்.
இரண்டு கம்பிக் கூடுகளுக்கிடையில்  இந்தக் கருத்துப் பரிமாற்றம் எளிதானதல்ல. கைதிகளைப் பார்வையிட எல்லா உறவுகளும் கூடி இருப்பார்கள். குழந்தைகள், தாய்மார், சகோதரர் என்று கூட்டம் நிரம்புவதால் கைதிகள் ந்திப்பு இடத்தில் ஒரே த்தம். எதைக் கதைப்பது எதைத் தவிர்ப்பது என்று அந்த இடத்தில் சிந்திக்கவே முடியாது.
"உறவுகள் வருகிறார்கள். பாத்தின் மிகுதியால் பல வகையான சிற்றுண்டிகளும் வருகின்றன. ஆனால் அவர்களைப் பார்க்கவோ அவர்களின் வேதனைகளையும் எங்களின் வேதனைகளையும் பகிர்ந்துகொள்ளவோ முடிவதில்லை. ஒரு பணிஸுக்காகவே ஒரு ந்திப்பு நிகழ்கிறது'' என்கிறார் நான்கு வருடமாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி ஒருவர்.
காலத்திற்குக் காலம் இவர்களின் கண்ணீர் தோய்ந்த கதைகள் அவ்வப்போதான உண்ணாவிரதங்கள் கோரிக்கைகள் இன்று வரை "செவிடன் காதில் ஊதிய ங்காகவே' இருக்கின்றன.
இந்த நிலையில் இறுதிச் ந்தர்ப்பமாக சாத்வீகப் போராட்டம் ஒன்றுக்குத் தமிழ் மக்களை அரசியல் கைதிகள் கேட்டுள்ளனர். வாழ்வியலின் வேதனைகளையும் பிரிவுகளையும் புரிந்துகொள்ளாத சில அரசியல்வாதிகள் சுய லாபத்துக்காகவும் தமது இருப்புக்காகவும் கபட நாடகம் ஆடுகின்றனர். "விடுதலைப் போராட்டம் எவ்வாறு கொச்சைப் படுத்தப்பட்டதோ அது போன்றே எமது விடுதலையும் கொச்சைப் படுத்தப்படுகின்றது. இந்தச் ந்தர்ப்பத்தில் பல்கலைக் கழக மூகத்தின் ஊடா கவும் தமிழ் கலை கலாசார அமைப்புக்கள் ஊடாகவும் ர்வதேச மூகத்தின் ஊடாகவும் மனித உரிமைகள் அமைப்புக்கள் ஊடாக வும் சாத்வீகப் போரட்டம் ஒன்றை முன் னெடுத்து எமது விடுதலையை உறுதிப் படுத்த தமிழ் மக்களாகிய நீங்களே முன்வர வேண்டும்.'' என்பது கைதிகளின் கோரிக்கையாக இருக்கிறது. 
"பணத்துக்காக வாதாடும் கூட்டமாக இருக்காது விடுதலைக்காகக் குரல் கொடுக் கும் மூகமாய் ட்டவாளர் அனைவரும் மாற வேண்டும். இதுவே எமது அன்பு கலந்த உரிமை நிறைந்த வேண்டுகோள்'' என அரசியல் கைதிகள் தமது கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
எது எப்படியாயினும் தமிழ் மக்கள் சார்பாக ஏதோ ஒன்றுக்காக குரல் கொடுக்க முற்பட்டவர்களே இன்று அரசியல் கைதிகளாக மாறியுள்ளனர். அந்த தார்மீக உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களின் விடுதலைக்காகப் போராட வேண்டியது தமிழ் மக்களின் கடமையே.

விகேஎம்

நன்றி-சூரியகாந்தி (17.06.2012) 

Post Comment

கருத்துகள் இல்லை: