ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உண்மையைத் தெளிவுபடுத்த யாருமே இல்லையா?


மனித வாழ்வில்  நீரும், நெருப்பும் இன்றியமையாதவை. இவை நல்ல பல காரி யங்களுக்குப் பயன்படும் அதே தரு ணத்தில் அந்த மனித குலத்துக்கே பேராபத்துக்களையும் விளைவித்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை நாம் தேடிச் செல்கிறோமா அவை நம் மைத் தேடி வருகின்றனவோ இரண் டுக்குமே பொறுப்பாளி மனிதனே. தண்ணீராலும் நெருப்பாலும் ஆகிப் போனவற்றைவிட அழிந்துபோனவையே அதிகம். இந்தப் பட்டறிதலைப் புரிந்து கொள்ளாது நாம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

வடக்குக்கான பெரு நீர்த்தேக்கம் என்று வர்ணிக்கப்படும் இரணை மடுக்குளம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினை அது தேக்கும் தண்ணீரின் பங்கீடு. கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கிடையேயான தண்ணீர்ப் பங்கீடு பற்றிய இந்தச் சிக்கல் எதிர்கால அபிவிருத்திக்குத் தடையாக அமைந்து விடக்கூடாது என் பதே அனைவரதும் விருப்பமாகும்.

இரணைமடுக் குடிதண்ணீர் விநியோ கத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நீண்டகாலத்துக்கு முன்னரே உதவ முன்வந்தது.ஆனால் நாட்டுச் சூழ்நிலை காரணமாக அந்தத் திட்டத்தை ஆராயவோ நடைமுறைப் படுத்தவோ முடியாதுபோய்விட்டது.

2010இல் இந்தத் திட்டம் மீள உருப் பெற்று இன்று அதற்கான கிளைத்திட் டங்கள் உருவாக்கப்பெற்று நடை பெற்றுவரும் நிலையில் மக்கள் விருப் புச் சார்ந்து இந்தப் பெரும் திட்டம் தடைப்பட்டு போகும் சூழ்நிலை ஏற் பட்டிருக்கிறது.

நீண்ட காலமாகப் போர் காரணமாக நிலைபேண் அபிவிருத்தி எவையும் வடக்கு கிழக்கில் இடம்பெறவில்லை. இதனால் அபிவிருத்தியின்போது ஏற் படும் நடைமுறை, நடைமுறை சாராத பிரச்சினைகளைத் தீர்க்க நாம் பழக்கப் படுத்தப்படவில்லை. உதாரணத்துக்கு வீதி அகலிப்புத் திட்டத்தின் ஆரம்பத் தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நோக்கலாம்.

அபிவிருத்திக்கு ஒத்துழைக்கவேண்டி யது மக்களது கடமை. அதே சந்தர்ப் பத்தில் மக்களது உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் மதிப்பளிக்கவேண் டியது அபிவிருத்தியாளர்களது கடமை. இந்த இருதரப்பு ஒத்துழைப்பும் முரண் படும்போது அபிவிருத்தித் திட்டம் முடங் கிப்போகிறது. அதன் ஊடாக மக்களே பாதிக்கப்படுகின்றனர். 

இலாப நோக்கம் வேண்டாம்
இரணைமடுத் திட்டத்தின் கிளைத் திட்டங்களை சில உள்ளூர் முகவர்கள் தம்வசம் வைத்திருக்கின்றனர். ஆரம்ப கட்டவேலைகள் பலவற்றை இவர்கள் வடிவமைத்துவிட்டனர். இடையில் முதன்மைத் திட்டம் முடங்கிப் போனால் இவர்களுக்குச் சேர வேண் டிய பொக்கற் மணி புசிப்பற்றுப் போய் விடும்.இதற்காகவே திட்டம் குறித்த எதிர்க் கருத்துவாதிகளை இவர்கள் விமர்சிக்கின்றனர், பொறுப்பற்ற கருத் துக்களை வெளியிடுகின்றனர், மக் களைக் குறைகூறுகின்றனர் என்றெல் லாம் கூறப்படுகிறது.

இரவல் வாங்குவதில் தப்பில்லை
இந்த நிலை மாறவேண்டும். மக்கள் ஏன் மறுக்கின்றனர்?அவர்களது நிலைப் பாடு என்ன?அதற்கான விடைகள் எவை? மக்களை எப்படி அபிவிருத்தி யின்பால் அணிதிரட்டுவது? எதிர் காலத் தேவைகள் குறித்து எப்படி மக் களை உணரவைப்பது? போன்றவற் றைத் தெளிவுபடுத்தவேண்டியதே இன்றைய தேவை. இதை அறிவுபூர் வமாக, ஆதாரபூர்வமாக அபிவிருத்தி யாளர்கள் மக்கள் முன்கொண்டு செல்லவேண்டும். ஆவணங்களை யும் அறிக்கைகளையும் ஆதாரப் படுத்தி மக்களை ஏய்க்கக் கூடாது.

ஆளணி, அறிவு நுணுக்கம் போத வில்லை, அதனாற்றான் எல்லோரும் மேலெழுந்த வாரியாகத் தங்களுக்குப் பட்டதைத் தெரிவிக்கின்றனர், இது அபிவிருத்தித் திட்டத்தை மேலும் மேலும் பாதிக்கின்றது என்ற கருத்தும் நிலவுகிறது. துறையியல் நிபுணத்துவம் எம்மிடத்தில் போதாது என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. குறிப்பாகத் துறைசார் வல்லுநர்கள் சிலர் நாட்டுக்கு வெளியே வசிக்கின்றனர். இங்கிருப்பவர்கள் தங்கள் இயலு மைக்கு ஏற்ப வேலை செய்தாலும் ஒரு சில இடங்களில் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. எனவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை தயாரிக்க முன்னரும் தயாரிக்கும்போதும் நடை முறைப்படுத்தும்போதும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய வர்களின் அனுபவங்களைக் கவனத் தில் எடுப்பதுடன் மட்டும் நின்றவிடா மல் இந்தத் திட்டத்தில் அவர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொள் வது அவசியம்.

சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நீர்முகாமைக் கட்டமைப்புக்களை நாம் முதலில் புரிந்துகொள்வது மட்டுமன்றி தேவைக் கேற்ப அத்தகைய நாடுகளது முகாமைத்துவ உதவிகளை நாடுவதும் தவறாகாது.

விவசாயத்தை நிறுத்தலாமா?
வெளிநாட்டு நீர்முகாமைக் கட்டமைப் புக்களில் இப்போது பெரும் மாற்றங் கள் நிகழ்ந்துவருகின்றன. குறிப்பாக விவசாய நடவடிக்கைகளின்போது நெற்பயிருக்குப் பதிலாக வேறு அதிக வருமானம் தரக்கூடிய பயிர்கள் பரிந் துரைக்கப்படுகின்றன. நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் நான்கில் ஒரு பங்கு நீர்கூட இவற்றுக்குத் தேவையில்லை என்பதுடன் காலம்,செலவு, மனித உழைப்பு என்பவற்றை மீதப் படுத்தி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் சிறுபகுதியே அரிசிக் கொள்வனவுக்கு போதுமானது என் பதுமே இந்த நாடுகளது  கருத்தாக இருக்கின்றது.

இது இலங்கையை, குறிப்பாக வடக் கில் இதுபற்றிய கருத்துருவாக்கம் முற் றிலும் கிடையாது. ஆனால் குறித்து கொழும்பில் இருப்பவர்கள் இப்போதே சிந்திக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் கிளிநொச்சி விவசாயத்தை நம்பி இருக்கும் ஒரு  மாவட்டம். அங்கு இரு போகங்களும் நெற்செய்கை தவிர்க்க முடியாதது. பெரும்போகச் செய்கை மழையை எதிர்பார்த்ததாயினும் சிறுபோக நெற் செய்கை முற்றிலும் குளங்களிலேயே தங்கியிருக் கிறது.

அதிலும் கடந்த மூன்று வருடங்களாக காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற் றம் போகச் செய்கையைப் பாதித்தி ருக்கிறது. விவசாயிகள் தொடர்ச்சியாக தொழில் நட்டத்தை சந்தித்துவருகின்றனர்.இவர்களுக்கான காப்பீடுகளோ இழப்பீடுகளோ  இல்லை.

இப்படி இருக்கையில் இவர்களது வாழ் வாதாரத்துக்கான நீரை மற்றொரு மாவட்டத்துடன் பங்கிட்டுக்கொள்வ தில் அவர்கள் தயக்கம் காட்டுவது நியா யமானதுதான். எனவே அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுத் திட் டம் முன்வைக்கப்படவேண்டும். அது பற்றி மக்களுக்குத் தெளவுபடுத்துவது மிக முக்கியம். அதை விடுத்து 2 அடிக்கு அணையை உயர்த்துகிறோம் அதில் சேமிக்கப்படும் தண்ணீரை மட்டுமே அள்ளி எடுப்போம்; எஞ்சியவை உங் களுக்குத்தான் என்றால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

உதாரணத்துக்கு 36 அடி கொள்ளள வுத் திட்டம் பூர்த்தியான பின்னர் மழை வீழ்ச்சி இல்லாத ஒரு வருடத்தில் குளத் தில் கொள்ளளவுக்குக் குறைந்தளவு தண்ணீரைத்தான் தேக்கமுடிந்தது என்றால், அந்த வறட்சியான காலத்தில் யாழ்ப்பாணத்து மக்கள் குடிதண்ணீர் இல்லாமலே வாழ்ந்துவிடுங்கள் என்று சொல்லிவிடமுடியுமா என்ற அச்சம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஏற்படுவது இயல்பானதுதான். வன்னியில்  பயிர்கள் தண்ணீரின்றி வாடிக் கொண்டிருக்க இரணைமடுத் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழும் அந்தச் சந்தர்ப்பத்தில் மனித னுக்குக் குடிக்கவே தண்ணீர் இல்லை யாம் பயிருக்கா தண்ணீர் வேண்டும் என்று பதில் கேள்வி எழாதா என்று அவர்கள் கேட்பதையும் நிராகரித்து விட முடியாதுதான். 

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் என்ன மாற்று ஏற்பாடு இருக்கிறது என்பதை யும் திட்டவியலாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் இப்போது சொல் லும் மாற்றுத் திட்டங்கள் நாட்டின் தற் போதைய அரசியல் சூழ்நிலை தோற்று விக்கும் அச்சம் காரணமாக நிராகரிக் கப்படுகின்றது. அத்தகைய நிலையில் புதிய மாற்றுத் திட்டங்களை அறிமுகப் படுத்தி மக்களின் நம்பிக்கையை வெல் வதே அதிகாரிகளின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதைவிடுத்து நிதி திரும்பிவிடும் என்று அவர்களை மிரட்டுவது வெற்றியைத் தராது.

மாற்றுத் திட்டங்கள் சாத்தியமா?
""எங்கட குளத்தை எங்களிட்ட விடுங்கோ நாங்கள் காலம் காலமா விவசாயம் பண்ணினதுபோல இனியும் பண்ணு வம். யாழ்ப்பாணத்துக்கு நிலத்தடித் தண்ணீர் இருக்கிறதுதானே'' என்று இந்தத் திட்டத்தைக் கிளிநொச்சி மக்கள் அடியோடு நிராகரித்தால் அதுவும் தவறானதே. யாழ்ப்பாணத்து மக்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா? அவர்கள் குடிக் கக்கூட தண்ணீர் தரமாட்டீர் களா? இது என்ன தெலுங் கனுக்கும் தமிழனுக்கும் மலை யாளத்தானுக்கும் தமிழ னுக்கும் இடையில் தமிழகத்தில் நடக் கும் தண்ணீர் சண்டையைப் போன் றதா? கொடும் வரட்சி ஒன்று வந்து வன்னியில் தண்ணீருக்குப் பெரும் பஞ்சம் என்று ஏற்பட்டுவிட்டால் யாழ்ப் பாணத்து நிலத்தடி நீரில் இருந்து ஒரு சொட்டுக்கூட வன்னிக்குத் தரக்கூடாது என்று சொல்வீர்களா? என்ற தார்மீகக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடி யாது.

விவசாயத்துக்கும் மேலாக தேவை கள் அதிகரித்துக்கொண்டிருக்கின் றன. இருக்கும் வளங்களைச் சரியாக முகாமைப்படுத்தி பங்கீடு செய்து கொள்வதுதான் எல்லோருக்கும் பய னுள்ளது; சரியானது. சரியான சந்தர்ப் பம் ஒன்றின் ஊடாகத் தண்ணீரைப் பகிரவேண்டியது காலத்தின் கட்டாய மாகி இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு இரண்டு தரப்புகளுக்கும் வெற்றி கிடைக்கக்கூடிய விதத்தில் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்த யோசிக்க வேண்டுமே தவிர, அதனை முற்றாக நிராகரித்து அதன் மூலம் கிளிநொச்சிக்குக் கிடைக்கப் போகும் நன்மையையும் வீணடிக்கக்கூடாது.

அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக உணர்ச்சிபொங்கப் பேசுவார்கள். பின் னர் அவர்களே ""நான் இரண்டும் கெட் டான் நிலையில் நிற்கிறேன்'' என்றும் சொல்வார்கள். எனவே அவர்களைத் தள்ளி வைத்துவிட்டு மக்கள் தெளிவா கச் சிந்திக்க வேண்டும். தமக்கு எது தேவை; எப்படித் தேவை என்பதைக் கலந்துரையாடல்கள் மூலம் தெளிந்து கொண்டு அதனை அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். 

அதுபோன்றே இது நீண்டகாலத் திட்டம் என்பதையும் எதிர்காலத் தேவை என்ன என்பதை யும் மக்கள் ஒரே நாளில் உணர்ந்து விடமாட்டார் கள். அவர்களை விழிப்புணர்வு அடையவைக்க அதிகாரிகளும்  திட்ட மிடலாளர்களும் கடமையையும் தாண்டி சேவையாக மேலும் கடுமை யாக உழைக்க வேண்டும்.

சாத்தியமாகக்கூடிய மாற்று வழிகளை எல்லாம் ஆராய்ந்து அவை எந்தள வுக்குச் சாத்தியம், சாத்தியம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ஆனையிறவு நீர்த்தேக்கம்
மழைகாலத்தில் இரணைமடு வான் பாயும். அந்தக் காட்டாற்று வெள்ளத்தை கடலில் கலக்கவிடாது தடுத்து ஆனை யிறவு வெளியில் தேக்கி ஒரு புதிய நீர்தேக்கத்தை உருவாக்கும் திட்டம் பற்றிய யோசனைகளும் முன்வைக் கப்படுகின்றன. இதன் சாதாக பாதககள் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.

வழுக்கையாறு, செம்மணி 
மாற்றிடங்களாகுமா?
அதுபோன்றே யாழ்ப்பாணமும் தனக் கான மாற்றுவழிகளைத் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு தசாப்த காலத் துக்குள் குடிதண்ணீர்ப்  பற்றாக்குறை ஏற்படலாம் என்பது அண்மைய கண்டு பிடிப்பல்ல. யாழ். பல்கலைக்கழகம் முதற்கொண்டு பலதரப்பாலும் இது எப்போதோ சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. ஆனாலும் யாழ்ப்பாணத்துக்கான நீர் முகாமைத்துவம் இன்றளவும் சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என் பது கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்வுகூறப்பட்ட விடயத்தில்கூட அக் கறைசெலுத்தாத அளவுக்கே யாழ்ப் பாணத்து நிலைமை இன்றளவும் இருந்துவருகிறது. நிலக்கீழ் நீரை மீள் உற்பத்திசெய்யும் திட்டங்கள் உருவாக் கப்பட்டபோதிலும் அவை இன்றளவும் ஆரம்ப புள்ளியிலேயே இருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் முற்று முழுதாக இந் தப் பிரச்சினைக்கு தீர்வாகாது விட்டா லும் ஓரளவாவது சமாளிக்கக்கூடியவை என்பது உண்மையே. பெருந் திட்டங்களுக்காக காத்திருப்பதை விடுத்து சிறு சிறு திட்டங்களை முத லில் பயனுடையதாக்குவதுதான் செயல்வீரம்.

அரசியல் ஆறுகளின் சங்கமம்
எல்லாவற்றையும் அடியோடு நிராகரிப் பது மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்பதை நாம் அரசியலில் பட்டறிந்திருக்கிறோம். அன்று முழுமை யாக நிராகரித்த மாகாண சபையைத் தான் எங்கள் அரசியல் பலமாக இன்று உலகுக்குக் காட்டுகின்றோம். எனவே நிராகரிப்புக்களைவிடுத்து சாத்தியமான வழிகளை முயன்று ஆராயுங்கள்.அடுத்ததாக பருவகால ஆறாக இருக்
கும் கனகராயன் ஆற்றுடன் மகாவலி கங்கை முதலான நித்திய ஆறுகளை இணைத்து அவற்றை இறுதியில் வழுக்கையாற்றில்கொண்டு வந்து விடும் திட்டமும் ஒன்றுண்டு. அல்லது இந்த நித்திய ஆறுகளை  இரணை மடுக்குளத்தில் இணைத்து அங்கி ருந்து நீர்விநியோகத் திட்டத்தை மேற்கொள்ளும் எண்ணக்கரு உண்டு.

இந்த முயற்சி தேசியத்திட்டங்களுக் குள் அடங்குகிறது. அரசின் உடன் பாட்டுடன் செய்யப்படவேண்டியது. எனினும் இத்தகைய முயற்சிகளுக்கு நடைமுறைச்சாத்தியமற்ற சில விட யங்கள் குறுக்கிடுவதாக நீண்டகால மாகத்தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ஆற்றோடு அள்ளுண்டு சிங் கள குடியேற்றங்களும் வடக்குக்கு வந்துவிடும் என்பதே. கூழுக்கும் ஆசை மீசைக் கும் ஆசை என்பது போல்த்தான் இந்த கதை.அரசியல் வாதிகளே! மக்கள் உங்களுக்கு வாக்களிப்பது எதற்காக? இதுபோன்ற நெருக்கடிகள் வரும்போது அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உங்களிடம் இருக்கிற தல்லவா?

சர்வதேசம் வரை தமிழர் பிரச்சினை யைக் கொண்டுசென்றுவிட்டதா கக்கூறும் நீங்கள்தானே இப்படியான உள்ளகத் தந்நிரோபாயங்களையும் முறியடிக்கவேண்டும். கடலில் கலக் கும் தண்ணீரை திசைதிருப்ப கூலி கொடுக்கவேண்டியதில்லை.இந்த அடிப்படையைக் கொண்டு சிங்களக் குடியேறிகளை தடுக்க அரசியலையும் பயன்படுத்தவேண்டும். அதன்மூலம் தான் தமிழர் பகுதிகளும் அபிவிருத்தி அடையும். பலத்தைப் பாவிக்காது துர்க் காரணங்களை கூறாது செயற்படவேண் டியதே அரசியல்வாதிகளது கடமை.

அரசு தலையிட்டால்?
தேசியத் திட்டம் என்ற போர்வையில் அரசு தலையிடுமானால் சில திணிப்புக்களைதவிர்க்கமுடியாதுபோகும். அதாவது இலங்கையை ஆசியாவின் அதிசயம் ஆக்கும் 30 ஆண்டு திட்டத் தில் உள்ளபடி அவை செயலுருப்பெற் றால் அந்த விளைவுகள் பாரதூரமா னதாகவே இருக்கும். மலையக பொரு ளாதாரத்தை பரவலடையச் செய்யும் இலங்கை அரசின் திட்டம் இப்போது வடபுலத்தை நோக்கி தோட்டப்பயிர் கள் சிலவற்றை நகர்த்துவதில் தொடங் கியிருக்கிறது.

இவை சாத்தியமாகும் பட்சத்தில் தொழிற் படையும் நகர்த்தப்படவேண்டிவரும். இது தவிர்க்கமுடியாத குடியேற்றங் களாகிவிடும் என்பதை நாம் உணர வேண்டும். இரண்டு மாவட்டங்களுக் கிடையிலான தண்ணீர்ப்பங்கீடு வடக்கு மக்களின் இருப்பை அழிக்கும் வெள்ளக்காடாகிவிடக்கூடாது.

நன்றி சூரியகாந்தி(29.12.2013)

Post Comment

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுயநலம்...! வேறு எதுவும் காரணமில்லை...

vkm சொன்னது…

உண்மைதான் அண்ணா...........