வியாழன், ஜூன் 25, 2009

முறட்டு இரவு


போதையில் வந்த பொல்லாதவர்
கைகளில் எங்கள் முகங்கள்
கலந்தாலேசிக்கப்பட்டன - பின்பும்
நெழிந்த பாத்திரங்களை பழித்த
கன்னங்களுடன் யாக சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள் - அங்கும்
யேசுநாதரின் வாக்குறுதியைக்
காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.

புதன், ஜூன் 17, 2009

கொலைக்கருவிகள்




பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்

துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது

செவ்வாய், மே 12, 2009

உயிருள்ள பிணங்கள்




நான் கண்ட கனவு முடிந்துவிட்டது
நேற்றோடு-இன்று வெறுமையால்
புலம்பித்திரிகின்றேன்.தினமும்
கூடவே இறந்துகிடக்கும் தென்னை
மரமும் இடையில் நசிந்த
உடல்களும் சாலையில்
தேங்கிக்கிடக்கின்றன்.

சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்ட தலைகள்.



நிலவிரிப்பின் கீழ் நின்மதிப் பெருமூச்சு
செலவில்லாது போக்கு வரத்துச்செய்ய
சிறு தூரமாகிவிட்டது எம் நிலம்-நேற்று நாம்
இருந்தஇடத்தில் வெடிகணைச்செலுத்திகள்
வந்து குடியேறி எமது இருப்பிடத்தை
பார்த்து விச எச்சியை துப்புகின்றன.
பீரங்கிகள். சன்னங்கள் தமிழ் உடல்களை
கிழித்துக்கொண்டு வேறு உடலடகளை தேடுகின்றன

வியாழன், மே 07, 2009

சொல்லும் வார்த்தை



மாரிக்காலமழை சொன்னது
சுட்டு பொசுங்கும் தேசத்தை
மீளவும் உயிர் கொடுக்க
முடியவில்லை என்று

நான்புகமுன்பே அங்கு
ஒளிகள் பிறந்துவிட்டன
கூரைகளில் காலை
கதிரவன் சொன்னது

புதன், ஏப்ரல் 08, 2009

எப்பவோ முடிந்தகாரியம்



பிரிக்கப்பட்ட உறவுகள்
பற்றி எண்ணியபடி
பொழுதுகள் கழிக்கப்பட்டன
உறவுகள் பலவாறு!
தாயென்றும் தந்தையென்றும்
அண்ணனென்றும் தம்பியென்றும்
அக்கா தங்கை அயலவர் நண்பர்
பிரிவுகள் நிரந்தரமாயும் வந்துவிட்டன.

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

அவசர வண்டிகள்


மன்னாரின் விளை நிலங்களிலிருந்து
மூட்டைகளை கட்டிய சனங்கள்
கால்மடித்து இன்னும் இருக்கவில்லை
மர நிழல்களில் தஞ்சம் புகும்போதெல்லாம்
மடிகளில் வந்து விழும் குண்டுகளால்
சிதைந்த உடல்களை கொண்டு
மாட்டு வண்டில்கள் புறப்பட்டன

வைத்தியர்கள்


சர்வதேசத்தின் கழிவு
இரும்புத்துண்டுகளின்
இருப்பிடங்கள் தமிழர் உடல்கள்
சல்லிக்கூடைகளை சுமக்கிறன
தமிழர்தலைகள் நாளையைநோக்கி

அறுவை சிகிச்சை நிபுணர்களாக
ஆட்லறிகளில் ஏற்றி
அவசரமாக அனுப்பப்படும்
ஆபத்து வைத்தியர்கள்
பிஞ்சு உடல்களை கிழித்து
அணிந்தனர் ஆடையாய்

வியாழன், மார்ச் 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வெளிச்சத்தின் கனவால் சிதறிப்போன எண்ணங்கள்.


வழமைபோல் எனது அறையில் நான்மட்டுமே. ஏதோ பெரிய வேலைமுடித்துவிட்டு வீடுதிரும்பியவன் போல களைத்த முகத்துடன் சேட்டைக்கழற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். மிளிர்ந்துகொண்டிருந்த ரீயூப்லைற்றைச்சுற்றி,