வட மாகாண சபை மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம், என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது.
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில் தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன் கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.
ஆனாலும் தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவர்கள் உணர்ச்சி அரசியலுக்கு அப் பால் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர்.