திங்கள், ஜூன் 04, 2012

மே 18 மறந்தவர்களும் மறக்காதவர்களும்


காலை 8.30 மணி, அவ ரமாக தொலை பேசிக்கு 3 தவறிய அழைப்புக்கள் வந்திருந்தன. புதிய நம்பராக இருந்ததால் திருப்பி ஒருமுறை மிஸ்கோல் அடித்துவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டேன். அந்த நம்பரில் இருந்து மீண்டும் கோல் ""கம்ப்பஸ் பொடியன் ஒரு வனுக்கு யாரோ அடித்துப் போட் டாங்களாம். மண்டை உடைந்து கொஸ்பிற்றல்ல அற்மிற் பண்ணி இருக்கு'' இது தான் அந்தப் புதிய நம்பரில் இருந்து எனக்கு கிடைத்த செய்தி. 
அவரமாக, நடந்த ம்பவத்தை பத்திரிகை நண்பர் ஒரு வருக்குத் தெரிவித்து விட்டு எனது நாளாந்த கடமைக்குத் திரும்பினேன். அப்போது எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுமென நான் நினைத்திருக்கவில்லை.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வன்னியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே நாள்களில் மனிதப் பேர வலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உலக நாடுகள் பார்த்திருக்க, உலகெங்கும் செய்திகள் பரவிக் கொண்டிருக்க கூட்டம் கூட்ட மாக எங்கள் உறவுகள் கொல்லப் பட்டார்கள், காயப்படுத்தப்பட்டார்கள். உணவின்றி, நீரின்றி இருப்பிடமின்றி, உடுக்க மாற்று உடையின்றி அவர்களின் அவலம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது.
இந்த அவலத்தை தடுக்க யாரும் முன்வராவிட்டாலும் வன்னியில் தமிழ் மக்களுக்கு பேரவலம் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதை பலர் பேசிக்கொண்டார்கள். ஊடகங்கள் தங்களின் செய்தித் தளமாக அந்த களமுனையையே பார்த்துக்கொண்டிருந்தன. சிலர் உண்ணாவிரதம் இருந் தார்கள். சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்சிலர் தங்கள் உயிர்களையே தீயிட்டுக் கொழுத்திக் கொண்டார்கள். எந்த நிலைமைகளிலும் இலங்கை அரசு தனது இனவாத அழிப்பில் இருந்து ற்றும் விடுபடாமல் ர்வதேச நாடுகளின் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வை நிர்க்கதியாக்கியது.
இது போன்ற துயரமான, அவலமான ம்பவங்களை அறியாத தெரியாத எவரும் இலங்கையிலோ அல்லது புலம்பெயர் தமிழர்கள் வசிக்ககூடிய நாடுக ளிலோ, அயல் நாடுகளிலோ இருந் திருக்க முடியாது என்பது எனக்கு தெரிந்த உண்மை.
ஆனால் துயரம் தோய்ந்த யாழ்ப்பாணத்தில்  வீதிகளிலும் வீடுகளிலும் வைத்து தெருநாய் களை சுடுவதைப் போல் நாளுக்குநாள் பலர் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தில்  போரை எதிர் கொண்டு இன்னும் வடு அழியா மல் இருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் முள்ளிவாய்க்காலை மறந்து என்னிடம் புதினமாக வினவியதுதான் எனக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பல்கலை மாணவன் தர்ஷானந்த் நடு வீதியில் வைத்து இனம் தெரியாதவர்களினால் தாக்கப் பட்ட செய்தியை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அவர் ""கம்பஸ் பொடியங்கள் இப்படித் தான், ஏதாவது அவங்களுக்க ண்டையா இருக்கும். அடிபட்டு மண்டையை உடைத்திருக்குங்கள்'' இதுதான் அந்த மாணவன் தாக்கப்பட்டது தொடர்பில் அவரது காரணம்.
எனக்கு அவர் கூறுவது ஏதோ எரிச்ல் ஊட்டுவதாக இருந்தது. ""இல்லை அவன் கொஞ்ம் முற்போக்கான பொடியன். வெளியில ஒழிவு மறைவு இல்லாமல் எதையும் பேசிக் கொள்பவன். கொஞ்ம் வாயாடி, ஆனால் தனிப் பட்ட பிரச்சினைகளில் அவன் ண்டைக்குப் போகமாட்டான்'' என்று எனது விளக்கத்தை அவருக்குக் கொடுத்தேன்.
அதற்குப் பிறகு ""அப்படியானால் ஏன் அடிச்வங்கள்?'' அவரது கேள்வி பல கேள்விக் குறிகளுடன் இருந்தது.
""இன்று மே18 தானே'' என்று சின்ன வார்த்தையில் கூறினேன். அவருக்கு அது விளங்கவே இல்லை. ""முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவால் கம்பஸில் நினைவு நிகழ்வு செய்ய ஏற்பாடு செய்திருப்பாங்கள். அதால பொறுக்காம யாரும் அடிச்சிருப்பாங்கள்'' என்றேன் அவருக்கு அதுவும் புரியவில்லை.
ஆச்ரியமாகவும், ஆத்திரமா கவும் இருந்தது. ஆனால் அவர் எதற்காக அப்படி இருக்கிறார்? இதில் ஏதாவது இரண்டாவது நிலைப்பாடு உண்டா? எனக்குக் கேள்விகள் எழ கதையை நிறுத்தி விட்டேன்.
போகும்போது ""இதுகளுக் கேன் இந்த தேவையில்லாத வேலை சும்மா படிக்க வந்தா படிச்சுட்டு போறது'' என்ற சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
அவருக்கது சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம். அல்லது என்னிடத்தில் ஏதாவது கதை புடுங்க எண்ணியிருக்கலாம். ஆனால் அதை என் மனது ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பதிலாக ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள்? இவர்களுக்கு உயிர் இல்லையா சொந்தம், பந்தம், பாம் எதுகுமேஇல்லையா? மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர்கள் பத்திரிகை பார்க்கவில்லையா? வானொலி கேட்கவில்லையா? குண்டுச் த்தங்களை உணரவில்லையா? குழந்தைகளும், சிறுவர்களும் துடிதுடித்து இறந்து போனதை கேள்விப்படவே இல்லையா? திரும்பத் திரும்ப கேள்விகள் மீண்டுகொண்டே இருந்தன.
எங்களது உணர்வுகளை முழு மையாக வெளிப்படுத்துவதற்கு, உரிமைகளை ஏற்பதற்கு தகுதியற் றவர்களாக நாங்கள் இருக்கின் றோம் யார் என்ன செய்தாலும் எது செய்தாலும் அதை அரசியலோ டும் பகைமையோடும் தொடர்பு படுத்துவதற்கென்று பலர் காத்திருக்கின்றார்கள். இது காலங்காலமாக எங்கள் இனத்துக்குள் ளேயே உருவாகிப்போன ஒன்று. இதனால் சில உணர்ச்சிவப்பாடுகளை நாங்கள் வெளியே பலர் முன்னே வெளிப்படுத்திவிட முடியாது. அவையடக்கம், பொது அடக்கம், பாதுகாப்பு என்று எல்லாத் திசைகளையும் பார்க்க வேண்டியுள்ளது.
இருந்த போதும் நடந்தவற்றை மறந்து புதிய உலகிற்குள், அடக்கு முறைக்குள், அதிகாரத்துக்குள் வாழ்வதற்கு எண்ணவே  முடியாதிருக்கின்றது. இந்த சூழலில் மூன்று வருடத்துக்கு முன் நடந்து போன இனப் படுகொலையை ஒரு இனத்தின் வாழ்வியல் மீதான நெருக்குதல்களை எப்படி மறந்துவிட முடியும்? ஒவ்வொரு ம்பவங்களையும் நினைக்கும் போது இந்தக் கணம் நடந்தது போல் தோன்றும் கொடுமைகளை எப்படி மனங்களில் இருந்து தூக்கி எறிவது? இது சாதாரண மனிதரால் எப்படி முடிகிறது?
அப்படியானால் அவர்கள் மீது ந்தேகம் தோன்றுகிறது. அவர்கள் மறக்கவில்லை. மறந்தவர்களாக நடிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் எதையோ உணர்த்த விரும்புகிறார்கள். எது எப்படி மறைக்கப்பட்டாலும் உண்மைகள் எப்போதும் விழித்திருக்கும். உணர்வுகள் அதைச் சொல்லக் காத்திருக்கும். இந்த உலகில் 2009 மே18 வரலாற்றுரீதியில் ஓர் இனப்படுகொலை நாள். இது எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் எங்கள் நெஞ்சினில் பதிந்திருக்கும். 
நன்றி-சூரியகாந்தி (20.05.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: