செவ்வாய், மே 12, 2009

உயிருள்ள பிணங்கள்




நான் கண்ட கனவு முடிந்துவிட்டது
நேற்றோடு-இன்று வெறுமையால்
புலம்பித்திரிகின்றேன்.தினமும்
கூடவே இறந்துகிடக்கும் தென்னை
மரமும் இடையில் நசிந்த
உடல்களும் சாலையில்
தேங்கிக்கிடக்கின்றன்.

பருத்த யானைகளையும் நாற்
படை வீரர்களையும் தள்ளிக்கொண்டு
குருதி ஆறுகள் புறப்பட்டன-பரணியில்.
இன்று தமிழனின் வரலாற்றைத்
தள்ளிக்கொண்டு வருகின்றன
சர்வதேச சேற்று ஆறுகள்-

இதுவரை கனவு கண்ட எதிரி
கண்களைத்துடைத்தபடி
நிழல்களின்பின் நடக்கின்றான்
முறிந்த பனையும் எரிந்த வயலும் அவனை
ஆழைக்கிறன அழிவின் வழிநோக்கி
உயிருள்ள பிணங்கள் ஊருக்குள் இப்போ

கொம்புகளைப் பெற்றுவிட்டன.
குதிரைகள் மண்ணை ஏந்தியபடி
சார்க் நாடுகள் விலகின்
குதிரைகளுக்கு கொம்பேது
கோம்பில் மண்ஏது!தமிழ்குருதி;
ஆறாக்கப்பட்டுவிட்டன அதில்
ஆடித்துச்செல்லபடுபவை
ஆயல்நாட்டு கறுப்புமுகங்கள்!

இன்றும் கனவு வரும் அது
நனவாகும் என்றெண்ணித் தூங்கினேன்.
மனித வாழ்வும் மரணச் சடங்குகளும்
மரண ஓலங்களும் வீதியில்
நடப்பதை எண்ணியபடியே!
வெறுமையாக்கப்பட்ட மனதில்
காலையில் ஏதோ ஒரு
கதை சேர்க்கப்பட்டதை உணர்ந்தேன்.
இரும்பு மழைகளி;ல் நனைந்தபடி
வெகு தூரம் நடந்து சென்று
வேளை உணவருந்தியபின்
வுpசாரணைக் கலைஞர்களின் சந்திப்புக்கள்
நிகழ்ந்தன. விடியவே நீதுபதியும் அவர்களே!

தாயின் கண்முன் வேடிக்கயாக
ஆழைத்துச்செல்லப்பட்ட மகள்
பல மிருகங்கள் மத்தியில்
காட்சிக்கு வைக்கப்பட்டாள் பல
கைகள் மாறியபின் முகாமிற்குள்
தாயின் கண்முன் வெற்றுடலாக

இரும்பை ஏந்தியே பழகிய கைகள்
போலி முகங்கள் என்றபின்னும்
வாலை ஒடுக்கியபடி அதற்குள்
மண்டியிடவேண்டுமா?இன்னும்கனவுகள்
எனக்குள் வரத்தான் செய்கிறது.
தேக்கிவைக்க இடமில்லை மனதில்.

ஆழிக்கப்படும் அடையாழங்களும்
ஆழிந்த உறவுகளும் மனதில்
கனவை முடித்துக்கொண்டு நான்
போகவேண்டியிருந்தது மனவள
ஆலோசனைக்கு ஊமை நெஞ்சுடன்….

Post Comment

கருத்துகள் இல்லை: