வியாழன், மார்ச் 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.


இயற்கை எழில் கொஞ்சும் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களும் சேர்ந்த சிறிய கிராமத்திலஇ; ஒரு வறிய விவசாயிக்கு மூன்றாவதும் கடைசிப்பையனாகவும் பிறந்தவன் றமேஸ். எதுவோ தகப்பனின் உழைப்பாலும் தாயின் முயற்சியாலும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தான்.
தந்தை கஸ்ரப்பட்டு உழகை;கக்கூடியவர்தான் ஆனால் உழகை;கும் பணத்தில் அரைவாசியை தன் உடல்அலுப்பைத் தீர்க்க எடுத்துவிடுவார்.மிகுதி அம்மாவின் கையில் சேரும். “இந்த மனுசன் திருந்தாது. எப்பவும்இப்படித்தான் வீட்டுக்கஸ்ரம் உணராததுகள்” தாய் பொறுப்புள்ளவளய்த்தான் இருக்க வேண்டும்.

றமேசின் தந்தைக்கு வயல் தோட்டம் என்று இருந்தாலும் நின்மதியாய் தொழில் செய்ய முதலீடு ஏதும் இருக்கவில்லை. ஏதோ தன் உழைப்புத்தான் முதலீடும் வருமானமும். அதனாலோ என்னவோ சிவலிங்கத்துக்கு வீட்டில் அக்கறையில்லை. அப்படிச் சொல்வதைவிட ஒரு விரக்தி நிலைதான் அது.
றமேஸ் பள்ளிப்பரவத்தில் சுட்டித்தனம் நிறைந்தவன். ஏடு தெடக்கிய அன்றே தன்னை சிவம் சேறின் மடியில் இருத்தியதற்காக தாய்க்கு வீட்டில் வந்து நல்ல அடி “ஏன் அவற்ற மடியில என்ன இருத்திநீங்க” என்று.

தாய் பார்வதி எப்படியாவது மகனைப் படிப்பித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். காரணம் தகப்பன் ஒரு குடிகாரன் தான் எட்டாம் வகுப்புத்தான் படித்தவள். இருந்தாலும் குடும்ப வறுமை றமேஸின் கல்வியில் பல தடைகளைப் போட்டது.

றமேஸிற்கு பள்ளிக்குப்போவதைவிட தந்தையுடன் தோட்டத்துக்குப்போவதென்றால் நல்லவிருப்பம்;. காரணம் தனக்காக அப்பாவும் அம்மாவும் கஸ்ரபடுகிறார்கள் என்பதை நல்லாவே உணர்ந்திருந்தான். “அம்மா நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்ல அப்பாவோட தோட்டத்துக்கு போகப்போறன்”என்றவாறு வீட்டுக்கு பின்புறமாகப்போனான் றமேஸ். “இல்ல ராசா நேற்ரும் ரீச்சர் கண்டு என்னத்தான் பேசினவா. அப்பாவோட நான் போறன். நீ பள்ளிக்கூடம் போ” என்றவாறே சிவப்பியில் கறந்து வந்த பாலை காச்ச ஆரம்பித்தாள்.

தாயின் உதவியுடன் 9ஆம் தரம் வரை வந்துவிட்டான். “அம்மா பாவம் எனக்hகக மாட்டுக்குப் பின்னால திரியிறா”இது தான் அவனது ஏக்கமாக இருந்தது. அதனால்த்தான் அடிக்கடி பாடசாலைக்குப்போகாமல் நின்று விடுவான். “அம்மா இண்டைக்கு மாடுகள நான் கொண்டு போறன்” என்றான். இல்ல இல்ல எனக்குத்தெரியும் அது நீ நிக்கவேண்டாம்” “அப்பிடி என்றால் பள்ளிக்கூடம் போயிற்று வந்து என்னை மாறிவிடு” சொல்லிக்கொண்டு நேற்றப் பிடுங்கிய மிளகாய் பழத்தை காயப்போட சென்றாள்.

அம்மாவின் விருப்பப்படியே றமேஸ் பாடசாலைக்குப்போய்விட்டு வந்து தாயை தேடிப்போனான். போகும் வளியில்; ரீயூசனுக்கு போன வகுப்பு பொடியனுகள். “எங்கடா றமேஸ்? மாடு அம்மா வைச்சிருக்கிறா மாறிவிடப்போறன். ஏன்ரா மாடு மாடு என்று சாகிற ரீயூசனுக்கு வந்து பாக்கலாமே” நக்கலாகக் கேட்டான் ரூபன்.

உண்மையில் அவன் மாடு மாடு என்று சாகிறான்தான். காரணம் அவைதான் அந்தக்குடும்பத்தைப் பொறுத்தவரை குல தெய்வங்கள். அவைக்கு சிவப்பி கறுப்பி வெள்ளையம்மா குண்டாத்த என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.வயிறு பட்டிணிஇல்லாமல் தூங்க அவைதான் அந்த குடும்பத்தின் தாய்ப் பறவைகள்.

வகுப்பு ரீச்சரும் சரி பாட ரீச்சரும் சரி றமேஸை பேசுவது அதிகம். காரணம் வீட்டுக்கஸ்ரம் அவர்களுக்கும் தெரியும். “ஏதோ கஸ்ரப்பட்டு அதுகள் படிப்பிக்குதுகள் நீ நல்லாப் படிக்க வேணும்” என்று தினமும் சொல்லுவினம்.தமிழ் பாட ரீச்சர் றமேஸின் வீட்டுக்கு பக்கத்து வீதியில்த்தான் இருக்கிறா. அடிக்கடி தாயிடம் எல்லாவற்றையும் சொல்லுவா.

“அம்மா நீங்கள் தான் அவன வீட்டில மறிக்காம அனுப்போணும்.கஸ்ரம் கஸ்ரம் என்று சொல்லி அதுகளின்ர வாழ்க்கையையும் கஸ்ரமாக்கக்கூடாது”

வீட்டுக்கு வந்த பார்வதி றமேஸை கூப்பிட்டு “தம்பி ரீச்சர் எனக்குத்தான் பேசிறா. நீ இனி ஓழுங்கா பள்ளிக்குடம் போ! அவ வீட்டில ரீயூசன் சொல்லிக்கொடுக்கிறா அங்மையும் உன்ன அனுப்பச்சொன்னவா. இண்டையில இருந்து அங்கயும் போ”என்று அன்பாகச் சொன்னாள்.

தாயும் கல்வியை வெறுக்கவில்லை பிள்ளையும் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் இவர்களது குடும்பச்சூழல் இதுபோன்ற விரிசலிகளையும் அக்கறையின்மையையும் தோற்றுவிக்க ஏதுவாக இருந்தது.ரீச்சர் றமேஸிடம் தான் கற்பிக்கும் பாடங்களுக்கு கட்டணம் அறவிடவில்லை. க.பொ.த சாதாரணதரம் படிக்கும்போதுதான் ரீயூனுக்குப்போனான். தான் எப்படியாவது படித்துவவிடவேண்டும் அம்மாவின் கனவை நினைவாக்க பேண்டும் என்பதில் குறியாக இருந்த றமேஸ் சாதாரண தரப்பரீட்சையில் முதல்தரத்தில் சித்தி பெறவில்லை இரண்டாம் முறை 8பாடங்களில் சித்திபெற்றான்.

அவனது உயர்கல்விப்படிப்பிற்கு அந்தக்கிராமத்தில் வசதி இருக்கவில்லை. அயல் பிரதேசத்துக்கு அல்லது 20முஅ கடந்துதான் கற்கவேண்டியிருந்தது.

தனது கிராமத்து மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிநின்று கல்லூரி ஒன்றில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தான் றமேஸ்.
இடையிடையே வீட்டிற்கு வந்து போவான். பார்வதியும் தான் பொத்திப்பொத்தி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏதோ சமாளித்தாள். றமேஸ் வீட்டு நிலையை நன்கு உணர்ந்ததால் அதற்கு ஏற்றால் போலவே செலவுகளையும் வைத்துக்கொண்டான்.இங்கும் அவனால் முதல்தடவையில் சித்தியடையமுடியவில்லை.

இரண்டாவது தடவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரு தையல்கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கிழமை நாட்களில் காலை8.00 மணிமுதல் இரவு 8.00மணிவரை கடையில் வேலை செய்துவிட்டு அதன்பின்பு தான் தங்கியிருந்த றூமிற்குப் போய் படிப்பான்.சனி ஞாயிறு தினங்களில் ரீயூசனுக்குப்போவான்.

அவன் தங்கியிருந்த றூமிற்கு பக்கத்துவீட்டு அன்ரிகூடகேட்பா “தம்பி இப்பிடி படிச்சு எப்படி பாஸ் பண்ணப்போற”என்று. அன்ரிக்கு தெரியாது அவனது வீட்டு நிலை;. றமேஸ் தன்னைப்பற்றி அனாவசியமாக யாரிடமும் கதைப்பதுமில்லை. கேட்டால் சொல்வதுமில்லை.

எது எப்படியோ அவன் பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டான் என்ற செய்தியை அவனது பல நண்பர்கள் நம்பவில்லை. “அடேய் அவன் சுட்டிலக்கத்த மாறிச்சொல்லுறான். வடிவா பாக்கச்சொல்லு” “என்னடா கடயடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்” என்று பேசிக்கொண்டனர்.

தாயின் ஆசையிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நல்ல நம்பிக்கை கொண்டதால் றமேஸ் இன்று பல்கலைக்கழகத்தில்.உண்மையில் குடும்பச் சுமை அவனது கல்லிக்கு பாரமாகவன்றி படிக்கற்களாக இருந்திருக்கிறது என்பதிலும் பார்க்க அவன் அவ்வாறு மாற்றியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Post Comment

கருத்துகள் இல்லை: