செவ்வாய், மே 12, 2009

சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்ட தலைகள்.



நிலவிரிப்பின் கீழ் நின்மதிப் பெருமூச்சு
செலவில்லாது போக்கு வரத்துச்செய்ய
சிறு தூரமாகிவிட்டது எம் நிலம்-நேற்று நாம்
இருந்தஇடத்தில் வெடிகணைச்செலுத்திகள்
வந்து குடியேறி எமது இருப்பிடத்தை
பார்த்து விச எச்சியை துப்புகின்றன.
பீரங்கிகள். சன்னங்கள் தமிழ் உடல்களை
கிழித்துக்கொண்டு வேறு உடலடகளை தேடுகின்றன

கிடங்குகளிற்குள் இருந்து கிளம்பிய தலைகள்
சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்டன தாயின்
முலையில் முட்டிக்கொண்டிருந்த பிஞ்சு
குழந்தையின் குடல்கள் வேலியில் மாலையய்
வீற்றிருக்கின்றன –குழந்தை பேசுகிறது
சமாதானம்பற்றி அது அனுபவித்துவிட்டதால்-ஆனால்
அயல்நாடுகள் குழந்தை பிறக்குமுன்னே
கொன்று விடு என்று முதுகில் தட்டிக் கொடுக்கின்றன.

நில விரிப்புக்கள் எமது நிரந்தர வீடாகின-கிடங்குகள்
இப்போ எம அரண்மனையாகின இருட்டை
கிழித்துக்கொண்டு வரும் குண்டுகளை
தமிழ் தலைகள் வலிய இழுத்துக்கொண்டன
காந்தம் பொருத்தியவை போல..
தாயின் வயிற்றில் எஞ்சியிருந்த கருவும் தன்
உறவுகள் படும் இன்னலை கண்டு கதறமுன்
இருப்பு தவறு என்பதை உணர்த்திவிட்டது குண்டு.

சிதைந்த உடல்களை சுற்றி காகங்கள்
சத்தமிட்டு சாவை அறிமுகம் செய்து வைக்கின்றன
ஓடிஓடி அலுத்துவிட்ட வளர்ப்பு நாய்கள்
ஓரமாக நின்று ஊழையிடுகின்றன் வேண்டாம்
நமக்கினி வாழ்வு என்று.பறந்து பறந்து
அலுத்து விட்ட நாரைக்கொக்குகள்
விடைபெறுகின்றன தாய்நாட்டிடம் - எஞ்சியிருக்கும்
நாரை குஞ்சுகள் கூடுகளை எறிந்துவிட்டு
இறகின் வரவுக்காக கொப்பில் அமர்ந்து காத்திருகின்றன

மேச்சல் தரையில் இரத்தத்தால்
முளைத்த புல்லை மணந்தபடி
மனிதகுணம் இனி எம்மில் மலர்ந்துவிடுமோ
என்றஞ்சி உணவை மறுக்கின்றன் மந்தைகள்
கால்களையும் கைகளையும் இழந்த
மந்தைகள் மருத்தவ சிகிச்சைக்காக
ஜமலோகம் செல்கின்றன மணத்தபடி

இரத்தத்தை புசித்து அலுத்துவிட்ட
எறும்புக்கூட்டங்கள் ஒருபொழுதாவது
ஓய்விலிருப்போம் என்று நகரமுடியவில்லை!
கட்டெறும்பும் கறுத்தெறும்பும் கூடி யோசிக்கின்றன
குருதியை முட்டாது தப்புவது எப்படி என்று.
முடிவில் அவைகளும் குருதியால்
அடித்துச்செல்லப் பட்டன.

Post Comment

கருத்துகள் இல்லை: