
பொசுக்கிவிடுங்கள் நல்ல
நகரத்தை அங்குதான்
பொன்விளைகின்றது என்பதால்
அறுத்து விடுங்கள் தொடுப்புகளை
படகுகள் கரைசேராது நாடு
கடந்து போகட்டும்
துடைத்து விடுங்கள் அறிவு
கிண்ணங்களை அவர்கள்
இருப்பதால்தான் உண்மை
விழுங்கப்படாது போகிறது
கூட்டிவாருங்கள் பேய்களையும்
பிசாசுகளையும் பிணங்களின்
மேல் இருந்து பிரசாரம் செய்ய
நாடு நல்ல நிலைபெற்றதென்று
விடைபெறுவார்கள் அறிவு
கிண்ணங்களும் அருள்நகரங்களும்
குருதி தோய்ந்த முகத்துடன்
பத்திரிகைகளே!வானொலிகளே!
தெலைக்காட்சிகளே பேசுங்கள்
உங்களை தொலைத்துவிடுபவர்
பற்றியல்ல உங்களிடம்
இருந்து பிரிந்தவர்கள் பற்றி!
குரு முதல் குரோதன் வரை
சட்டம் சனமென்ற நாட்டில்
கொலைக்கருவிகள் நீதி
தராசுகளில் ஏறி நீதிபதிகளை
கேட்டன வேண்டுமா
உன் உயிர் என்று.
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக