வியாழன், ஜூன் 25, 2009

முறட்டு இரவு


போதையில் வந்த பொல்லாதவர்
கைகளில் எங்கள் முகங்கள்
கலந்தாலேசிக்கப்பட்டன - பின்பும்
நெழிந்த பாத்திரங்களை பழித்த
கன்னங்களுடன் யாக சாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நாங்கள் - அங்கும்
யேசுநாதரின் வாக்குறுதியைக்
காப்பாற்றிக் கொண்டிருந்தோம்.


சுயநிலை அறிய மதுக்குடல்கள்
மறுத்துவிட்டன இப்போ வெறி
அரக்கமுகங்களில் பளபளத்தது
மத்தியானம் வரை சோற்றுக்காக சாய்த
கைகள் மாலையில் மதுக்கோப்பைகளில்
மாறிவிட்டன - இரவோடு
மதுக்கர மனிதர்கள் நல்ல சிற்பங்களை
எங்கள் முகத்தில் செதுக்கிவிட்டு நிமிர்ந்தனர்

குருதிகளும் கொப்பளங்களும் கொண்ட
எங்கள் மனங்கள் அடுத்தநாள் காலையில்
போசாக்கு நிரம்பியிருந்தன கூடவே
முரட்டுத்தனங்களும் புகுத்தப்பட்டன

மது மனிதர்கள் தூங்கிவிட்டனர் சாமத்தில்
வயிறு தண்ணீருக்காக அழுதுகொண்டது
குருதிகள் இயல்பாகிவிட்டன அவர்களின்
கரங்கள் மட்டும் எம்மைவிட்டு அகலவில்லை

நேற்றய நிகழ்வாகிவிட்ட போதும் பிழை
என்றும் சரியென்றும் பலர் கதைத்ததை
பிழைதிருத்தி சரியென சித்திரம் வடிக்க
நண்பர்களின் மானாடுகள்

கடைசியில் பிழைகள் மதுக்களில்
மாற்றப்பட்டன இப்போ
விரிந்த முகங்களுடன் அவர்களும்
நாங்களும்….

பகையொன்றுமில்லை முன்னரே
பதவிகள் வகுத்த சட்டங்கள் எங்கள்முன்
பலிகொடுக்கப் பட்டதால் இன்னும்
பதிலற்ற முகங்களே எங்கள்முன்…

Post Comment

1 கருத்து:

தீபச்செல்வன் சொன்னது…

அன்பின் பூமுகன்

உனது வலையை இன்றுதான் பார்த்தேன்.
உனது ஆர்வம் ஒரு புதிய வரவாக இருக்கிறது.
உன்னிடம் மொழியும் அனுபவமும் நுண் பார்வையும் கூடவே இருக்கிறது.

தவிர இந்தக் கவிதை குறித்து நான் எதையும் சொல்ல முடியவில்லை.
மிருகமாகும் முகமும்
அதிகாரமாகும் செயலும் உனது பார்வைக்கு எட்டியது தொடர்பில்
வருத்தமடைகிறேன்.
எனினும் வெறுப்பில் இருந்தே இந்தச் சொற்கள் பிறந்திருக்கின்றன.

நீ எல்லாவற்றையும் இன்னும் உணர்ந்து கொண்டிரு.
உனது பக்கங்களையும் அதற் ஓட்டங்களையும் பற்றி உணர்.

ஆனால் கவிதையின் பிறப்பம் உனது வரவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நண்பன்