ஞாயிறு, நவம்பர் 17, 2013

தடுப்பு மிருகங்கள்



அவன் அழுகிறான்
எங்கள் கால்கள் நனைந்தன
அயலில் சிரித்துக்கொண்டு - சிலர்
அழுதனர் தமது அநியாயத்தை எண்ணி


யோன் சோவ் மீட்பரானார்
எல்லோரும் ஜெபிக்கின்றனர்
தங்களுக்காக அல்ல
தவறிப்போன குழந்தைகளுக்காக

தடுப்பு மிருகங்களையும் தாண்டி
உணர்வுகள் ஆர்ப்பரிக்கின்றன
எமக்கிங்கு நீதி - இல்லை
மீட்பர்களே மீட்டுத்தாருங்கள் என்று

மாலைப்பொழுது கரைகிறது
கண்ணீரின் வெள்ளத்தில்
அத்தனை மனங்களும்
எண்ணின பொழுது விடிந்துவிட்டதாய்!

தடுப்பு மிருகங்கள் தவறாது
கடமை காக்க - பிரிந்து
செல்கின்றன உணர்வுகள்
அடிமைகளாய் மீண்டும்
புறப்பட்டோம் வீடுகளுக்கு..

பூமுகன் (17.11.2013)

Post Comment

2 கருத்துகள்:

இராஜ முகுந்தன் சொன்னது…

மீட்பர்கள் வருவார்கள்....
மீட்கப்படுவோம்..........
....
....
நல்ல கவிதை வாழ்த்துக்கள் தம்பி.

vkm சொன்னது…

நன்றி அண்ணா