புதன், பிப்ரவரி 13, 2013

பட்டங்கள் பலவிதம் நாமும் ஒருவிதம்


கைக்கெட்டியது  வாய்க்கு எட்ட வில்லை என்ற நிலையோடு பல ஏமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேசெல்கின்றன. ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் போல அரசும் எல்லா நிர்வாகச் செயற்பாடுகளிலும் "கும்பல் லில் கோவிந்தா' என்ற கணக் காக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. 
ரூபாவின் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த, நாட்டின் பொருளாதாரத்தை தக்கவைக்க வேலை யற்றோர் பிரச்சினையைத் தீர்க்க, அயல் உறவை வலுப்ப டுத்த, சர்வதேச நெருக்கடியி லிருந்து விடுபட என்ற அவர் களின் அயராத உழைப்புக்கள் அர்த்தம் அற்ற கண்ணோட்டமாகவே வெளிப்படுகின்றன.

அண்மையில் இலங்கை முழுவதும் வேலையற்ற பட்ட தாரிகளுக்குப் பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டது. இதில் நீண்ட நாள்களாக வேலையற்று இருந்த பலருக்கு வேலை கிடைத்தது.

6 மாதங்களுக்கு, மிகச் சொற்பமான கொடுப்பனவுகளுடன் இவர்களைப் பயன்படுத்தி அரசு நாட்டின் அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரிக்கவுள்ளது.
இதன் மூலம் அரசு நல்ல இலாபம் கிடைக்கும். இந்த வேலையை அரச உத்தியோகத்தில் இருப்பவர்களைப் பயன்படுத்திச் செய்பவர்களாயின் பல கோடி செலவாகும். அரசின் நுட்பமான அறிவு இதற்கான பணச் செலவைக் குறைத்திருக்கிறது என்று பலர் பேசிக்கொள்கிறார்கள்.

அரசின் சூழ்ச்சிமிக்க நிர்வாக மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் மறுபுறத்தில் ஒரு சாராருக்கு பெரும் பாதிப்பாக மாறியுள்ளன.  இந்த நியமனத் தின் போது  உயர் தேசிய விருது எச்.என்.டி.ஏ, எச்.என்.டி.எம். ஆகிய கற்கை நெறியைச் சேர்ந்த வர்கள் வடக்கில் புறக்கணிக் கப்பட்டுள்ளனர்.
நியமனம் வழங்கப்பட்ட சில நாள்களில் இந்தக் கற்கைகள் இரண்டும் பட்டப் படிப்புக்குரிய தரம் அற்றவை என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் தெரிவிக்கப்பட்டு இவர்களுக்கான நியமன விலக்கல் தொடர்பில் விலக்களிக்கப்பட்டிருந்தது.

இந்த இரு கற்கைநெறியாளர்களும் தமது கற்கை முடிவில் தகுதி வாய்ந்த பட்டப்படிப்புக்கு சமனான பட்டத்தை உடையவர்கள் என்ற நிலைப்பட உயர் கல்வி அமைச்சாலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவாலும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 இல் 46/90 பகுதி iii இன் படி இந்தக் கற்கை நெறிக்குரியவர்கள் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்குத்  தகுதியான பட்டத்தை உடையவர்கள் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தவிர வெளிநாடுகளில் இந்த இரு கற்கை நெறிகளும்  இளமாணி பட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு முதுமாணி கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். உதாரணமாக லண்டனில் இந்தக் கற்கை நெறிகளை உடையவர்கள்  மேற்படிப்பை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது ஐக்கியராச்சியத்தில் அரச அதிகாரம் பெற்ற கற்கை நெறி சான்றிதழ் வழங்கக் கூடிய நிறுவனம் இலங்கையில் உயர் தேசிய கற்கைநெறியாளர்களது கற்கையை இளமாணி கற்கையாக ஏற்றுக்கொள்கிறது.

பொதுவாக உலகத் தரத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார், அறிவுசார் கற்கைநெறிகளை வழங்கக்கூடிய பல்கலைக்கழகங்களும் அதன் பகுதி நிறுவனங்களும் The Association of Commonwealth Universities  என்ற அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு பதிவு செய்யப்படும் பல்கலைக்கழகங்களும் பகுதி நிறுவனங்களும் வழங்கும் பட்டம்/ சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் மேற்படி இரு கற்கைநெறியாளர்களதும் சான்றிதழ்கள் பட்டப்படிப்புக்குச் சமானானவை அல்ல என இலங்கை அரசே பரிந்துரை செய்கிறது?
அடுத்ததாகச் சில மாவட்டங்களில் இதே கற்கை நெறியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டங்களில் 2010, 2011 ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
வடக்கில் 2010, 2011 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு நிய மனம் வழங்கவே வேண்டும் என்பதில் அமைச்சர்கள் இரு வர் நல்ல சேவை செய்தனர். இந்த சேவையின் விளைவோஎன்னவோஅந்த இரு கற்கை நெறியாளர்களும் தூக்கி வீசப் பட்டுள்ளனர்.

உயர் தேசிய கற்கையாளர்களுக்கு குறித்த நியனம் வழங்கப்படுவதாயின் 2010, 2011 பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் பறிமுதல் செய்யப் பட வேண்டும் என ஒருமைக் கருத்து இப்போது எழுந்துள்ளது.

நியமனம் வழங்கப்பட்ட பின் அதை இரத்துச் செய்வது என்பது சாத்தியமா என கேள்விகள் எழுப்பப்பட்டாலும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது சாத்தியமான ஒன்றுதான்.
பட்டதாரிகள் பயிலுநர்களாகவே ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நிறுவனத்தின் கீழும் சம்பளம் எதை யும் பெறவில்லை. இவர்களுக்கு ஒரு ஊக்குவிப்புத் தொகை மாத்திரமே வழங்கப்படுகிறது. இதனால் பயிற்சிக் காலம் முடிவடைந்ததும் இவர்களை நிறுத்திவிட அரசு முயற்சி எடுப்பதாகச் சிலர் பேசிக்கொள்கின்றனர்.

தமக்கு நியனம் வழங்கப்படவில்லை எனக் கூறி போராடி வரும் உயர் தேசிய கற்கையா ளர்களுடன் மறுபுறத்தில் எங்க ளது நியனம் பறிக்கப்பட்டு விட் டது என இன்னுமொரு தொகை யினர் போராட வாய்ப்பளிக்க விரும்பாது என்பது எவ்வளது தூரம் உண்மையானது என்ப தும் கேள்விக்குரியது.
தகைமை பெரிது
உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை என்பன வேறு. உங்களுக்கு பட்டதாரிப் பயிலுநர்களாக நியமனம் தருவது பொருத்த மற்றது. உங்கள் துறைக்கேற்ற வேலையையே பெற்றுத்தர வேண் டும் என்று போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் மத்தியில் இன் னொரு பேச்சும் உள்ளது.
பல்கலைக் கழகத்தில் இது போன்ற எல்லாத் துறைகளை யும் சேர்ந்த மாணவர்களுக்கே பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வா றெனின் இவர்களின் கற்கை எந் தத் தராசில் நிறுக்கப்பட்டது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

எப்படியானாலும் நாங்கள் பட்டதாரிகளே! எங்களுக்கு அரசாங்கம் நியமனம் வழங்க வேண்டும் என்பதில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியாளர்கள்  தம்மாளான எல்லா முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர்.  இங்கு யார் பக்கம் பிழை இருக்கிறது. எவர் முயற்சி வெற்றிபெறும் என்பது யாருக்கும் இதுவரை தெரிந்திருப்பதாக இல்லை.

இலங்கை அரசு முன்னர் குறிப்பிட்டதைப் போல் தம்மை வளர்த்துக்கொள்ள அரும்பாடு பட்டு வருகிறது. இருந்தாலும் அது அவர்களுக்கு பெரும்பாடாகவே உள்ளது.  இந்த நிலையில் இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிய மனத்திலும் அவர்கள் மீதான அக்கறையிலும் அரச நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவது மட்டுமல்லாமல் முழு நாட்டுக்கும் பாதகமான பக்கங்களையே சிந்திக்கிறது.

அரசியல் தலையீடுகள் ஒருபுறம் நிர்வாகக் குழப்பங்கள் மறு புறம் அரசுக்குள் பல்வேறு முரண் பாடுகளைத் தோற்றுவிக்கிறது. இவர்களின்  நானா நீயா போட்டி அடிமட்ட மக்கள் மத்தியிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு ஏதோ ஒரு பிரச்சினை கருதி இலங்கையில் போராட்டம் நடைபெறுகின்றது என்பது தெளிவாகிறது. குறிப்பாக அர சுக்கு எதிரான கோஷங்களேஇப்போது வலுத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. சரி பிழைக்களுக்கு அப்பால் மக்களின் எதிர்ப்பலைகள் அரசு மீது தொடர்ச்சியா எழுந்துள்ளமை அதன் எதிர்கால இருப்பை கேள்விக் குறியதாக்கும். தவிர உள்ளூர் மட்ட அரசியல் செல் வாக்குகள் அற்றுப்போகும். பொருளாதார அபிவிருத்திக்கு எதிராக அரசியல் மாற்றம் பெறுவதோடு அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டிய சூழலும் உருவாகலாம்.

வெள்ளம் வருமுன் அணை கட்டுவது போல அரசு செயற் படவேண்டும். பட்டதாரிக ளுக்கு நியமனம் கொடுப்பது போல எந்த அடிப்படைகளை கருவிகளாகப் பயன்படுத்துவது யார் யாரை உள்வாங்குவது என்ற ஏக முடிவுக்கு உட்பட்ட பின்னரே அவர்களை நியமித் திருக்க வேண்டும்.
மக்கள்  போராட்டங்களும் மக்கள் புரட் சியும் அவர்களின் வாழ்வுரிமை சார்ந்ததே.
--

29.07.2012

Post Comment

கருத்துகள் இல்லை: