புதன், பிப்ரவரி 13, 2013

வலி தெரியா முட்கள்...


தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இதுதான் அந்த உரையாடலின் முதலாவது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி "உனக்கு எங்கே வந்திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும் வரவில்லை'..... கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல் அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான் பகிர முனைந்தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட்டேன்.
வடக்குக் கிழக்கில் பட்டதாரிப் பயிலுநர்களை ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வும், நியமனமும் குறுகிய காலத்துக்குள் முடிவுற்றன. இதன் போது நீண்டகாலமாக வேலையற்று இருந்த பட்டதாரிகள் பலர் உள்வாங்கப்பட்டனர். இதன் போது  அதிர்ஷ்டவசமாக கடந்த வருடம் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அந்த அதிர்ஷ்டம் எனக்குத் துரதிர்ஷ்டமானது.
மீள் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிய அதற்கான பெறுபேறு ஆறுமாதங்களின் பின்னர் மாணவர்களின் அழுத்தம் காரணமாக வெளியிடப்பட்டது. பெறுபேறு எப்போது வெளியாகும் என்று கேட்பதற்குப் பல தடவைகள் ஏறியிறங்க வைக்கப்பட்டேன். பிழை என்மீது ஆகையால் ஏறித்தான் ஆகவேண்டும்.

சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு போன்ற தமது உரிமைகளுக்காக அந்த நெருக்கடியான காலப்பகுதியில் வேலை நிறுத்தத்திலும் போராட்டத்திலும் பல்கலைக்கழக கல்வி சார், கல்விசாரா ஊழியர்கள் மாறிமாறி ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமாக இருக்கவில்லை. பலபேரின் பிரச்சினை. அதன் தன்மை களும் வடிவங்களுமே மாறுபட்டிருந்தன.
ஐயா, எங்களுக்கு படிப்பு முடிந்து விட்டது என்று ஒரு கடிதம் தந்தியள் எண்டால் அதையாவது காட்டி வேலை எடுத்திடுவம், அழாத குறையாக ஒருநாள் பீடாதிபதியிடம் கெஞ்சினேன். ""நீங்கள் தவறை விட்டுவிட்டு எங் களை வந்து கேட்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை'' I can’t do that’ இதை மட்டுமே சொல்லி முடித்த அவர், கடிதம்தர மறுத்துவிட்டார். ஐயா ஆங்கிலப் பாடம்தான் உள்ளது. அதன் பெறுபேறும் அந்த டிப்பாட்மன்டில் போட்டுவிட்டார்கள். இந்தச் சம்பவங்களை மட்டுமாவது உறு திப்படுத்திக் கடிதம் தாருங்கள் என்றே நான் கேட்டிருந்தேன். அது எந்த விதத்திலும் நியாயமற்றது என அவர் மறுத்துவிட்டார்.

ஒன்றுமே செய்யமுடியாது. எனக்குப் பின்னும் பலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள் அந்தத் துணிவோடு நான் திரும்பி வந்துவிட்டேன்.

எல்லாப் பாடங்களும் பூர்த்தி செய்யாமையால் ஸ்ரேட்மன்ட் எடுப்பதற்காக விண்ணப்பத்தை முன்பு பூர்த்தி செய்யவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதனைப் பூர்த்தி செய்து கொடுத்திருந்தேன்.
பட்டதாரிகளுக்கான நிய மனம் தொடர்பில் மாணவர்க ளின் நெருக்கடி கூடியதால் இரக்க மனதோ என்னவே கல்வி சார் ஊழியர்களின் பணிப் புறக் கணிப்பின் மத்தியிலும் துணை வேந்தரின் அறிவுறுத்தலின் கீழ் துரிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரேட்மன்ட் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதும் போட் மீற்ரிங், செனட் மீற்ரிங் இழுபறி. ஒருவாறாக கடந்த 10ஆம் திகதி ஸ்ரேட் மன்ட் தருவதாகச் சொன்னார்கள். போனபோது பரீட்சைக் கிளைக்கு எனது "பயில்' வந்திருக்கவில்லை. எனது அடையாள அட்டையை வேண்டி இருந்த பயில்களுக்குள் இறங்கித் தேடிய ஊழியர் ஒருவர் ""உங்கள் பயிலைக் காணவில்லை கீழேதான் கேட்க வேண்டும்'' என் றார். சரி பறவாயில்லை என்று விட்டுக் கீழே இறங்கிச் சென்று அடையாள அட்டையைக் காட்டி இந்தப் பயிலை மேலே அனுப்ப வில்லையாம் என்றேன். எனது பயிலைத் தேடிச் சென்ற ஊழியர் திரும்பவும் வந்து என்னை ""நீங்கள் ஸ்ரேட்மன்ட் போம் நிரப்பிக் கொடுத்தீர்களா'' என்று கேட்டார். (அவரே இரண்டு வாரத்துக்கு முன்னர் எனது விண்ணப்பத் தைப் பொறுப்பேற்றிருந்தார்) தேடி எடுத்து எப்படியோ மேலே அனுப்பி வைத்திருந்தார்கள், "துரிதமாக' ஸ்ரேட்மன்டையும் நான் பெற்றுவிட்டேன். வெளி யில் வந்தபோது சில மாணவர்கள் மேலே பார்த்துக் கண்டபடி திட்டியவாறே இருந்தார்கள்.

இந்தச் சம்பவம் எனக்கு நேர்ந்த உண்மை அனுபவம். அவர் அவர் தங்கள் சுயத்துக்காக தங்கள் தங்களின் நியாயங்களை முன்வைப்பார்கள். நான் எனது வேலைக்காக எனது   சுயத்தை முன்வைத்திருந்தேன். பல்கலைக் கழகம் பல்வேறு காரணங்களைக் காட்டி  இழுத்தடிப்புச் செய்தது. படித் தவர்கள் மத்தியில் மனிதாபி மானம் எங்கு போயிற்று என்ற கேள்வி! இதில் நானும் ஒருவ னாக இருக்கலாம். பிழை என் மீதிருக்கலாம். காலத்தைத் தவற விட்டது எனது தவறே. ஆனால் நாட்டுச் சூழல் கல்வியைத் தொடர முடியாத நிலைமை போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக் கப்பட்ட மாணவர்களின் கேள்விகள் ""இவர்களுக்கு மனமே இல்லையா?'' என்பதே.

அவர்கள் தாமாகத் தவறி ழைக்கவில்லை. பரீட்சையில் "பெயில்' விடவெளிச் சூழல் பல இதற்குக் காரணமாக இருக்கின் றது. தினமும் நேரிலும் ஊடகங் களிலும் இந்த அவலங்களை நாங்களேபார்த்தோம், கண்டோம், கேட்டோம். எங்கள் சமூகம் திருந்தி முன்னுக்கு வரவேண்டும் என்பதை விட நான் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களிடத்தே மேலோங்கி உள்ளது.

பிழையை விட்டுவிட்டு அதைச் சரி என நியாயப்படுத்த நான் முன்வரவில்லை. இப்படியான பிழைகளை முதலில் படிக்கும்போது மாணவர்கள் விடக்கூடாது. பிழையை விட்டுவிட்டு அதை மன்னியுங்கள் மாற்றி அமையுங்கள் என்று மேலிடத்தில் உள்ளவர்களை கெஞ்சக் கூடாது. அவர்களின் அதிகாரம் எங்குவரை செல்கின்றது எனச் சோதிக்கக் கூடாது. அவர்கள் நீதிபதிகள் நாங்கள் குற்றவாளி கள். முள் இருக்கும் இடத்தைப் பார்த்துத்தான் கால்வைக்க வேண்டும். முள் குற்றிவிட்டால் முள்ளுக்கு வலி தெரியாது. அது எமக்கே வலிக்கும், விளைவையும் தரும்.                      *
எனது தவறு

பல்கலைக்கழகத்தில் நான் ஆண்டுகள் கற்கைநெறியை 2008இல் தொடர்ந்த நான், அதன் முதலாம் வருடத்தின் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சையின்போது ஆங்கிலப் பாடத்தில் சித்தியடையத் தவறினேன். எனக்கு அதன் பின்னர் மீள் பரீட்சை மூலம் அந்தப் பாடத்தை சித்தியெய்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் இருந்தன. முதலாவது சந்தர்ப்பத்தை அக்கறையின்றி விட்டு விட்டேன்.

இரண்டாவது சந்தர்ப்பத்தில் பரீட்சைக்கு விண்ணப்பித்தேன். பரீட்சை நடைபெற்ற தினத்தில் உடல் உபாதை காரணமாகத் தோற்றவில்லை. அதற்கான மருத்துவச் சான்றிதழும் நான் கொடுக்கவில்லை.

கடைசி சந் தர்ப்பம் 2011 நடைபெறவேண்டிய இரண் டாம் அரையாண்டுப் பரீட்சை யில் தோற்றுவதுதான். அதற் காக விண்ணப்பித்தேன். ஆனா லும் பல்கலையில் இடை யிடையே ஏற்பட்ட தடங்க லால் குறித்த பாடப் பரீட்சை 2012 ஜனவரியிலேயே நடை பெற்றது. இது என்னுடைய பெருந்தவறு.

15.07.2012

Post Comment

கருத்துகள் இல்லை: