ஞாயிறு, டிசம்பர் 15, 2013

அடித்து அணைத்தல்


இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. போருக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், கெடுபிடிகள், இனப்படுகொலைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட போர் முறைகள் குறித்து இந்த அழுத்தங்கள் எழுகின்றன.

இவை ஒவ்வொன்றையும் இலங்கை அரசு சமாளித்து தன்னை நிரபராதியாக வெளிப்படுத் துவதற்கு முழு முயற்சி எடுத்து வருகிறது. போர்க் குற்றம் தொடர்பில் ஆகக் கூடிய அறிவிப்பாக இத்தாலியின் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்ப்பு அமைகிறது.

மனித உரிமைகள் அமைப்புக்களால் இலங்கைக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப் பாடுகள், அதற்கான ஆவண ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பாயம்  தனது முடிவை அறிவித்திருக்கிறது. 

சர்வதேச தரத்திலான நீதிபதிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய இந்த ஆயம், ஒரு சமூகத்துக்கு அல்லது நாட் டுக்கு, ஓர் இனத்துவக் குழுவுக்கு உலக ஆதிக் கவாதிகளால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல் கள் குறித்துக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள இலங்கை அரசு இழைத்த அநீதிகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறது.

மனித உரிமைகள் அமைப்புக்களால் சமர்ப்பிக் கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பாயத்தின் முதலாவது அமர்வு கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டப்ளின் நகரில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையில் நடைபெற்ற  போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான நெருக்குதல்கள் குறித்து வலுவாக விசாரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆயத்தின் இரண்டாவது அமர்வு இந்த மாத ஆரம்பத்தில் ஜேர்மனியில் நடைபெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற  மனிதஉரிமை மீறல்கள் தொடர் பில் நேரடிச் சாட்சிகள் பங்கேற்றதுடன், ஐரோப் பிய மற்றும் பிற நாடுகளின் நிபுணர்களும் சாட்சியமளித்திருந்தனர் இதன் அடிப்படையில் மக்கள் தீர்ப்பாயம் 

1) இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படு கொலை செய்துள்ளது.

2) இனப்படுகொலைக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள்  துணை போயுள்ளன.

3) விடுதலைப்புலிகள் அமைப்பை முழுமையான தீவிரவாத அமைப்பாக கருதமுடியாது.

ஆகிய மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கித் தனது தீர்ப்பை வெளியிட்டிருந்தது.

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வெளியிட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல. 

காரணம், சர்வதேசச் சட்ட விதிகளுக்கு உட்படாத வகையில் போர்க்குற்றங்கள் அமைந்துள்ள மையால் அது குறித்து இறுதித் தீர்ப்பை வழங்குவதற்கு ஆயத்துக்கு தகுதி போதாது. ஆனால் சர்வதேச சட்டம் ஒன்று இயற்றப்படும் சந்தர்ப்பத்தில் ஆயத்தின் தீர்ப்பு வலுவுடைய தாகும். அதுவரை இது ஒரு முற்தீர்ப்பாகவே இருக்கும். எனவே இந்தத் தீர்ப்பாயத்தின் முடிவுகளைக் கொண்டு இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள விசாரணைகளைத் துரிதப்படுத் தவும் அதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள் ளவும், இலங்கையில் நடைபெற்ற மனித குலத் துக்கு எதிரான செயற்பாடுகளை சரியா தவறா என விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும்.

இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. வில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இந்தத் தீர்ப்பாயத்தின் முடிவு சமர்ப் பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பாயத்தின் முடிவுக்கு அப்பால் இங்குகுற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் மூன்று நாடுகளது வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமே அங்கு மனித குலத்துக்கு எதிரான சம்பவங்கள் நடந்தேறின என்று முதல் நிலையில் அமெரிக் காவும் இரண்டாவது நிலையில் பிரிட்டனும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என இந்தியாவும் கங்கணம் கட்டி நிற்கின்றன.

அப்படியானால் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிய கதையாக இந்த நாடு களது செயற்பாடு புட்டுவைக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு சர்வதேச போர்க் குற்ற விசாரணை ஒன்று இலங்கை மீது நடத்தப்பட வேண்டும் என்ற பிரிட்டனின் நிலைப்பாடு - இந்தியா எதையுமே வெளிப்படையாக அறிவிக்காது எடுத்துவரும் முடிவுகளைக் கொண்டு இவற்றை நான்கு வருடங்களுக்கு முன்நகர்த்தும்போது நிலைப்பாடு மாறுபடு கிறது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத அமைப் பாக சித்திரித்துவந்த இலங்கை அரசு அதனைச் சர்வதேச மட்டத்தில் கொண்டுசென்று பிச்சை எடுத்திருப்பதும் அம்பலமாகிறது. 

எந்தவித ஆராய்ச்சியும் இன்றி அப்போது இலங்கை அரசுக்கு உதவிய இந்த நாடுகள் இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்று சர்வதேச  மட்டத்தில் குரல் கொடுக்கின்றன. 
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்புப்படி விடுத லைப்புலி அமைப்பு கடும்போக்கு பயங்கரவாத அமைப்பு இல்லை எனக் கருதினால் இந்த நாடுகள் இன ஒடுக்கு முறைக்குத் துணைபோயி ருக்கின்றன என் பதே உண்மையாகும். 

ஆனாலும் சர்வதேச சட்டம் ஒன்றைச் சரிவர இயற்றுவது இந்த நாடுகளின் கைகளிலேயே இருக்கின்றன. அவை தம்மை காட்டிக் கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டா. அங்கேயும் ஒரு உரிமை மீறல் நிகழ இருக்கின்றது என்பது கவலைக்குரியதே.
நன்றி சூரியகாந்தி 15.12.2013

Post Comment

கருத்துகள் இல்லை: