ஞாயிறு, டிசம்பர் 22, 2013

வாழ்வைக்குடிக்கும் மது



நாகரீகப் பழக்கங்களில் ஒன்றாக இன்று மதுப்பாவனை முன்னிலை பெறுகிறது. நுகர் இன்பங்களுக்காக ஆரம்பிக்கும் இந்த குடித்தல் ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து சமுதாயம்வரை சீர்கெட்டுச் செல்லும் அளவுக்கு மாறியிருக்கிறது. இளவயதினர் நாகரீக மோகத்தின் உந்துதல் காரணமாக தீய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். அதற்கு அவர்க ளால் இயன்றளவு சமூக அந்தஸ்து வழங்கி மற்றவர்கள் இடத்தில் இருந்து தம்மை நாகரீகப்படுத்திக் கொள்கின்றனர். 



அதாவது, பிழைக்கு நியாயம் கற்பிப்ப தால் அவர்களது அநாகரிகம் நாகரிகமாக மாற்றப்படுகிறது. 
உண்டு கழிக்கும் இடைவெளிக்குள் நிகழ்ந்து போகும் மாற்றங்கள் வார்த்தை யிலும் செயலிலும் எத்தனையோ விளை வுகளை கொண்டுவந்துவிடுகின்றன. இதுவே மது எமக்காக விட்டுவைக்கும் மீதி. 
அது பரப்பும் கிளைகளும் ஊன்றும் வேர்களும் விசாலமானவை ஆளமா னவை. ஏனோ அவற்றை எம்மிடம் இருந்து தறித்து அகற்றமுடியாத ஒரு உடல்சார் தேவையாக மாற்றி வைத்திருக்கிறோம். 

பெற்றோர்களே! 
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் பழைய பொருட் கள் தேடிச் செல்லும் ஒருவர் மூலமாக வெளிவந்தது. 
தனது மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அவன் விரும்பிக் கேட்ட ஊக்க பானத்தை தாயார் வேண்டிக் கொடுத்திருக்கிறார். அதை அருந்தினால் தூக்கம் வராது நன்றாகப் படிக்க முடியும் என்பது மட்டுமே தாயாருக்கு மகன் கூறிய உண்மை. பழைய பொருட்களைக் கொள்வனவு செய்யும் வியாபாரி அந்த வீட்டுக்குச் சென்று பழைய பொருள்களை சேகரித்தபோது ஒரு உரப்பை நிறைந்த வெற்று ரின்களை அந்த தாயார் அவரிடம் கொடுத்திருக்கிறார். 

அப்போது விழித்துக் கொண்ட வியாபாரி இதை யார் இங்கே அருந்துவது என்று கேட்டிருந்தார். அப்போது தான் உண்மை தெரிந்தது. தாயாருக்கும் அது "பியர் ரின்' என்று அறியமுடிந்தது. 
பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் இந்தக் காலத்தில் கொண்டிருக்க வேண்டிய அக்கறை இதுவல்ல.எனவே போதைப்பா வனை தொடர்பில் பொறுப்புக்கூறவேண் டிய கடப்பாடு பெற்றோருக்கு இருக்கிறது. தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி வளர வேண்டும் எப்படியான பண்புக ளைக் கொண்டிருக்க வேண்டும் என்ப தில் அக்கறை செலுத்த வேண்டியது பெற் றோர்களது பொறுப்பாகும். 



பிள்ளைகளே!
சமூக களிப்பாடல்களுக்காக இளம்பராயத்தினர் மது, போதைவஸ்து பாவனையை சரியெனகொள்ள முற்படுகின்றனர். அதிலிருந்து விடுபடுபவர்களை எள்ளி நகையா டுதல் தம்மிடம் இருந்து ஒதுக்கிவைத் தல்போன்ற செயற்பாடுகள் காரணமாக மதுப்பாவனை இன்னும் வலுக்கட்டாயமாகத் தூண்டப்படுகின்றது. 

களவையும் கற்று மற என்று ஆரம்பித்து கள வையே தொழிலாகக் கொள்வது போல சிலர் களிப்புக்காக குடிக்க ஆரம்பித்து குடியின்றி இயங்க முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றனர். 
அதிகாலையில் ஒரு 'தம்'அடித்தால்தான் காலைக் கடமை நிறைவேறு கிறதாம். 
இப்படி நாளின் ஒவ்வொரு சாதாரண நிகழ்வுகளுக்கும் குடித்தல், புகைத்தல் பொருள் படுகிறது. 

சமூகத்தவர்களே!
நுகர் இன்பங்கள் சமூக நிகழ்வுகளில் இன்று முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆடம்பர நிகழ் வுகள் முதல் கொண்டு வீட்டுச் சடங்குகள் வரை பின்பக்க "பார்ட்டி' தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நண்பர்களுக்கு ஊற்றி அவர்களை மகிழ்விப்பதில் ஆரம்பிக்கும் கொண்டாட்டம் மண்டை உடைப்புக்களுடன் பொலிஸ் நிலை யம்வரை சென்று நிற்கும். இதுவே இன்று சமூக ஒழுங்காகி விட்டது. இது சமூகத்தைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்று. எனவே நாமே எம்மை அழித்துக் கொள்ளும் ஒன்றுக் காக எமது முழு உழைப்பையும் செலவிடுகிறோம் என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். 

மதுக்கடைகள்!
இலாபம் ஈட்டும் தொழிலிடமாக இன்று மதுக்கடைகள் முன்னிலை பெறுகின்றன.
விடிகாலையில் இருந்து கடை திறக்கும் வரை காத்திருந்து "குவாட்டர்' அடித்த பின்னரே மெளனம் கலைக்கும் விரதகாரர்களை இந்தக் கோயில்களிலேயே தினமும் காண்கிறோம். 

ஒரு விசேட தினத்தில் மதுக்கடை பூட்டியிருந் தால் அவர்கள் படும் பாடு குழந்தைக்கு தாய்ப் பால் ஊட்டத்துடிக்கும் அவதியை விட வேகமானது. 
சமூக நல நோக்குக் கருதி மதுக்கடைகளை அரிதாக்க அனைவரும் முன்வரவேண்டும்.  இல்லாமல் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றே.

கள்ளச்சாராயம்!
வரி விதிக்கப்பட்ட சாராயங்களுக்கு அப்பால் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வல்ல எந்த பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் உட்படாத தயாரிப்பாக இன்று பட்டி தொட்டி யயல்லாம் கிடைக்கக் கூடியதாக கள்ளச்சாரா யம் (கசிப்பு) மலிந்து கிடக்கிறது. 

உயிராபத்தை விளைவிக்கக் கூடிய இந்த உற்பத்திப் பொருள்களை  நாமே உற்பத்தி செய்து உயிரை மாய்ப்பதற்கு காரணமாகி இருக்கி றோம். வருமானம் ஈட்டுவதற்கான மாற்று வழி இது என்று கொள்ளும் சிலரால் சுற்றியிருப்ப வர்கள் சீரழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 



திட்டமிட்ட சதி!
இவை ஒருபுறம் இருக்க வட கிழக்குப் பகுதி களில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் அழிப்புப் பொறிமுறையயான்று பிரயோகிகப் படுவதாக கருதப்படுகிறது. அது குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகளை குறிவைத்து நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக் கின்றன. பாடசாலை, தனியார் கல்வி நிலைய மாணவர்களுக்கு போதை ஊட்டும் பொருள் களை விநியோகித்து அவர்களை அதற்கு அடிமையாகச் செய்வதன் மூலம் தமிழ் மக் களது தனித்துவத்தை சீர்குலைக்க முடியு மென சிலர் கருதுகின்றனர்.

அடக்குமுறை அடக்கு முறையில் இருந்து கிளர்ந்தெழவும் உரிமைகளைத் தட்டிக் கேட்கவும் இளையோரிடத்திலே இருக்கும் மிடுக்கை இல்லாதொழித்து நாகரிக புரள் நிலையை உருவாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சமூக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீர்மானிப்பது நாமே!
போதைப்பொருள் பாவனை தொடர்பில் எத்தகைய கருத்துக்கள் தோற்றம் பெற்றா லும் அதற்கு முழுக் காரணம் அதனைப் பயன் படுத்துவோரே யார் சதித் திட்டம் தீட்டி னாலும் அதற்குள் விழுவது, விழுந்தா லும் மீண்டெழுவது  எமது கடமையே.

காரணங்களைக் கூறி நாம் விடும் தவறு களில் இருந்து தப்பித்துக் கொள் வதை விடுத்து ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து செய லாற்ற வேண்டும். இப்போது சொல்லுங் கள் காலைக் கடனுக்கு ஒரு "தம்" தேவை தானா?

நன்றி சூரியகாந்தி (22.12.2013)



Post Comment

கருத்துகள் இல்லை: