வியாழன், ஜூலை 24, 2014

கண்துடைக்க வல்லவர் மஹிந்த!



இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான படுகொலைகள்,காணாமற்போதல் சம்பவங்களைக் கொண்ட 19 முக்கிய விடயங்களை விசாரிக்க குழு ஒன்றை( "உடலகம ஆணைக்குழு" ) உருவாக்கியிருந்தார் ஜனாதிபதி.
அந்த குழுவின் விசாரணைக்கு ஆலோசனை விழங்க இந்திய நீதிபதி பகவதி தலைமையிலான சர்வதேச குழுவும் பின்னாளில் நியமிக்கப்பட்டு அது பின்னர் காணாமற்போனது.

காணாமற்போகது என்பதை விட உடலகம குழுமீது நம்பிக்கை இன்றி சர்வதேச குழு விலதியது என்பதே உண்மை.

தருஸ்மன் யார் என்ற கேள்வி இங்கு நீங்குகிறது

ஐ.நா. செயலாளர் பான் கீ- மூன் தனக்கு ஆலோசனை வழங்கக நியமித்த குழுவில் தருஸ்மன் அடங்கியிருந்தார். அவர் குறித்து இலங்கை கடும் அதிருப்திகளை வெளிட்டது.

பகவதி குழுவில் தருஸ்மன் இடம்பெற்றிருந்தார். அந்த அனுபவமே - மூக்குடைவே, அவருக்கு இலங்கை குறித்த தனது அறிக்கையிடலை ஊக்குவித்திருக்கவேண்டும்.

தப்போது, போரின்போது காணாமற்போனவர்கள் தொடர்பில் தான் நியமித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மூவர் அடங்கிய சர்வதேசக் குழுவை நியமித்திருக்கிறார் மஹிந்த.

அதிலும் இலங்கைக்கு சார்பான, விடுதலைப்புலிகளுக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்டவர்களையே அவர் நியுணர்களான இனங்கண்டுள்ளார்.

இருந்தும் இந்த நிபுணர் குழு எப்போது காணாமற்போகுமோ?

சர்வதேச சக்திகளை கடந்த 10 வருடங்களாக ஏமாற்றுவதில் மஹிந்த முதலிடத்தில் இருக்கிறார்.

வாழ்க ஜனநாயகம்!!!

Post Comment

கருத்துகள் இல்லை: