வரலாற்றுக் காலங்களில் மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களே ஆதிக்கம்செலுத்தின. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்கான அமைச் சரவை, தொண்டர்படை என்று எல்லாக் கட்டமைப்புக்களும் இயங்கின. கவிபாடும் புலவனா கினும், கட்டுச் சொல்லும் குறிகாரனாகிலும் மன்ன னின் மறுபக்கம்பற்றிப் பேசிவிடக்கூடாது. அப்படி நடந்துவிட்டால் அவர்கள் பாடு சாவுதான்.
வரலாற்றுக் கதைகளை நினைவுபடுத்துவதால் எமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசுகள் சில இன்னமும் கொடுங்கோல் மன்னர்கள் போல ஆட்சி செய்துவருகின்றன என்பதை மறுக்க முடியாதல்லவா?

நேற்று வரை ஒளிர்ந்து கொண்டிருந்த மின் குமிழ் இன்று இருளை விழுங்கி மெளனமாக காத்திருக்கின்றது. வெளிச்சத்தின் நடுவே தெரியும் துப்பாக்கி உருவமும் கண்களில் படவில்லை. நாய்களின் குரைப்பொலி ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருந்தாலும் இரவு