
அன்றும் வழமைபோல் மாலை 6 மணிக்கு உணவகத்துக்குபபுறப்பட்டேன். மழை இருட்டு அந்த பொழுதை இரட்டிப்பாகக் காட்டியது. போகும் வழியில் பிள்ளையார் கோயில். கோயிலின் தெற்குவாசல் திறந்திருந்தது. வழமையாக நான் அந்த வழியாகப் போகும் நாள்களில் மலையில் வாயில் திறந்திருப்பதில்லை. வழமைக்கு மாறாக அன்று வாயில் திறந்திருப்பதற்கான காரணம் புரியாது மழை இருட்டில் உற்றுப் பார்த்த எனது கண்களுக்கு இரண்டு உருவங்கள். ஆவை இராணுவ சீருடைஇதேழில் தொங்கவிடப்பட்ட துப்பாக்கியுடன் தென்பட்டன.
சமயாசாரப்படி இந்துக் கோயில்களுக்குப் போவதாயின் ஆண்கள் மேலங்கியை கழையவேண்டும். பாதணி தரிக்கமுடியாது. இதன் காரணமாகவே கோயில் வாயிலில் நின்று கும்பிட்டுவிட்டு இறைவனின் எல்லா வரங்களையும் பெற்றுவிட்டதாகப் பெருமிதப்பட்டு கதை சொல்லும் எனக்கு பிள்ளையார் கோயில் சம்பவம் வியப்பாக இருந்தது.
எனது மனதுக்குள் எண்ணிக்கொண்டேன், சிலவேளைகளில் இப்படியும் இருக்குமோ என்று. யுத்தம் முடிந்து இரண்டுவருடங்கள் அகிவிட்டன. விடுதலைப் புலிகள் பற்றி உள்ளுர் கதைகள் வருவதில்லை. புலிகள் இலங்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்காப் போராடியதற்கான பல தடையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் இறந்தவர்களைப் புதைத்து வைத்த இடங்களையும் மிச்சமில்லாமல் அழித்துவிட்டோம். இதனால் காலம் காலமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்துவந்த மாவீரர் தினத்தை மறந்து விடுவார்கள். எனவே தமிழ்மக்கள் மறந்துவிடாமல் போரில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவுகூரட்டும் என்ற ஏற்பாடுதான் இது என்று.
கார்த்திகை 27 தமிழ் மக்கள் மனங்களை விட்டு என்றுமே அகலாத நாள். மலரெடுத்து மாலை கட்டி பூசிக்கும் நாள். இறந்துபோன தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு புனிதமான நாள். ஆனாலும் அந்த நாளை வெளிப்படையாக கொண்டாடுவதற்கு இலங்கையில் தடை. 2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட அடுத்த கணமே வன்னிப்பகுதியில் காணப்பட்ட தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பும் கட்டடங்கள்இ விடுதலைப் போரட்டத்தை சித்திரிக்கும் நினைவிடங்கள்இதூபிகள் சிலைகள் போன்ற எல்லாமே அழிக்கப்பட்டன. அவற்றுடன் அங்கு போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் உடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
வன்னியில் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் மணி ஒலி எழுப்புவதற்கும் அந்தணர்அல்லாத பூசகர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை செய்யவும் மணி ஒலிப்பதற்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டது. 25இ26இ27 ஆகிய தினங்களில் வன்னியில் உள்ள சகல ஆலயங்களிலும் பூசைகள் நடத்தவும் மணிகளை ஒலிக்கவும் கூடது என படையினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை இடம்பெறாவிட்டால் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமை தோன்றுமெனச் சுட்டிக்காட்டப்பட்டதால் அவற்றில் பூசை செய்வதற்கு பின்னர் படையினர் அனுமதி வழங்கினர் இ எனினும் மணி ஒலி எழுப்புவதற்கு அந்தந்த ஆலயங்களில் தடை விதிக்கப்பட்டது.
யாழ்பாணம் காரை நகரில் உள்ள ஆலயங்களில் மாவீரர் வாரத்தில் மணி ஒலி எழுப்பக் கூடாது என்று படையினர் அறிவித்திருந்தனர்.இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வடக்குமுழுவதும் பிறப்பிக்கப்பட்டது.இதுபோலவே யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ வவுனியா போன்ற இடங்களில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்திருந்ததுடன்இ ரோந்து நடவடிக்கைகளிலும் சிறு சிறு குழுக்களாக இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
ஆலயங்களுக்கு அருகில் பகலிரவாக இரண்டொரு இராணுவத்தினர் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அதிலும் 27ஆம் திகதி மாலை 6 மணி ஐந்து நிமிடம் என்பதை படையினர் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர். ஆலய மணியை யாரும் அசைத்துவிடாமல். விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழ்தேசிய மாவீரர் நாள் உரை நிகள்த்தியதும் மணிஒலி எழுப்பப்பட்டு அதன்பின்பு 06.06க்கு சுடர் ஏற்றும் புனித நேரமே அது.
யாழ்.பல்கலையை சல்லடைபோட்ட
படையும் பொலிசும்
தமிழ் தேசியத்தின் எழுச்சி என்பது பல்கலைக்கழகத்தை சார்ந்தது.இது வரலாற்று உண்மை.ஆரம்பத்தில் போராட்டத்தை முன்னெடுத்து சென்ற பலர் யாழ். பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்களே.போராட்டவளர்ச்சியின் ஒவ்வொரு பரிணாமத்திலும் அதன் பங்கு காத்திரமாக இருந்தது. போங்குதமிழ் எழுச்சியின் ஊடாக தமிழ் மக்களிப் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துகூறியதன் மூலம் யாழ்.பல்கலைக்கழகம் போராட்டத்தை புதிய வடிவத்துக்கு மாற்றியிருந்தது. இன்றுவரை உலகத் தமிழர்களால் ஈழ மக்களுக்கு நீதி கேட்டு நடத்தப்படும் போராட்டங்களுக்கு புதிய வடிவத்தை பொங்கு தமிழ் எழுச்சி வழங்கியது. இதற்காக யாழ் பல்கலைக் கழகம் நிறையவே விலையும் கொடுத்திருக்கிறது.
மாவீரர் தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சுவரெட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. துரதிஷ்டம் அந்த செய்தி படைப்புலனாய்வாரள்களுக்கு பல்கலைக்கழகத்திலிருத்தே அறிவிக்கப்பட்டது. உடனே நான்கைந்து மோட்டார்சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையர்கள் மாணவர் பொது அறைக்கு கீழ் இருந்த விளப்பர பலகைக் கண்ணாடிகளை அடித்து நொருக்கிவிட்டு அதில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை எடுத்து சென்றனர்.
மறுநாள் பல்கலைக்கழகம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக சமூகத்தினர் மாவீரர் தினம் கொண்டாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனால் பல்கலைக்கழகத்தை சோதனையிடப்போவதாகவும் கூறி நுழைந்த பொலிஸார யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் வளாகத்திலுள்ள மண்டபங்கள்இ விரிவுரை அறைகளைச் சோதனையிட்டனர்.
வன்னியில் எதுவாயினும்
இராணுவத்தின் அனுமதி தேவை
இலங்கை அரசு விடுதலை புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை பயங்கர வாதத்திடம் இருந்து மீட்டெடுத்ததாக பிரசாரப்படுத்தி அவர்களை தொடர்ந்து அடிமைகளாகவே பயன்படுத்தி வருகிறது. மண் குடிசை என்றாலும் தூய்மையாய் வாழ்த வன்னி மக்களை வானம் பார்த்து வாழவைத்து வேடிக்கை பார்க்கிறது அரசு.
போதாக்குறைக்கு அவர்கள் தமது பண்பாட்டை பிரதிபலிக்க கூடிய விழாக்களையும் நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கார்த்திகை “விளக்கீடு”திருநாளில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்படுகிறது.பொது இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.பொது நிகழ்வுகளுக்கு அழைக்கபடவேண்டியவர்கள் யார் யார் எனப் பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.வெளியிடப்படும் நூல்களாயினும் அதில் இடம்பெறும் அம்சங்கள் முற்கூட்டியே கோரப்படுகின்றன. அரசுக்கு சார்பற்ற மாற்றுகருத்துகள் அடங்கியவற்றை தவிர்க்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.
இதுபோலவே உணர்வுள்ள நிகழ்வுகளும் ஏதோ ஒரு மூலையிலாவது கொண்டாடப்படும்.அதை யாரும் கண்டுவிடவோ தடத்துவிடவோ முடியாது. இந்த மாவீரர் தீனமும் பிரத்தியோ இடங்களில் கொண்டாடப்பட்டே இருக்கிறது..மெழுகுவர்த்திகள் தமது கண்ணீரை வடித்தே இருக்கின்றன.உலகெங்கும் அந்தநாள் உச்சரிக்கப்பட்டே உள்ளது. ஏன் நாட்டின் ஜனாதிபதியும் மாவீரர் நாளை நினைவு கூர்ந்து தெற்கின் அதிவேக நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் மாவீரர் தினத்தில்.நவம்பர் 27 ஐ நினைவுகூர்து உரையும் நிகழ்த்தினார்.
நன்றி "உதயன்"(30.11.2011)
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக